565 தனியார் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



சென்னை : குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, சென்னையிலுள்ள 565 தனியார் தங்கும் விடுதிகளில், போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.ரவுடிகள் மற்றும் கூலிப்படையினர், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், தனியார் தங்கும் விடுதிகளில் தஞ்சம் அடைந்து வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து திருவல்லிக்கேணி, பெரியமேடு, பாரிமுனை என, சென்னையின் பல்வேறு பகுதிகளிலுள்ள, 565 தனியார் தங்கும் விடுதிகளில், நேற்று முன்தினம் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு தங்கியிருப்போர் விவரம், வருகைப்பதிவேடு, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதே போல, 4,265 வாகனங்களை சோதனையிட்டனர்.விதிமீறலில் ஈடுபட்ட, 76 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மென்பொருள் வாயிலாக, முகத்தை படம் பிடித்து, குற்ற வழக்கில் சிக்கிய நபர்களா என்பது குறித்து, 2,662 பேரிடம் விசாரணை நடத்தினர். இச்சோதனை தொடரும் என, போலீசார் தெரிவித்து உள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X