இயல்புநிலைக்கு திரும்பிய மாமல்லை விடுதிகள் | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
இயல்புநிலைக்கு திரும்பிய மாமல்லை விடுதிகள்
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 


மாமல்லபுரம் : சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற, வெளிநாட்டு வீரர்கள், அவரவர் நாடு திரும்பினர்.மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த ஜூலை 29 முதல், ஆக., 9 வரை நடந்தது. வெளிநாட்டு வீரர்கள், ஜூலை 26 முதல், தமிழகத்திற்கு வர துவங்கினர்.சென்னையில், தமிழக பாரம்பரிய கலாசார கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த பிரமாண்ட விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுடன், போட்டியை துவக்கினார்.

இதில், 184 நாட்டு, 1,700க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கணைகள் பங்கேற்றனர்.மாமல்லபுரத்தில் உள்ள ஆறு கடற்கரை விடுதிகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில் உள்ள 15 ஹோட்டல்கள் ஆகியவற்றில், அவர்கள், தமிழக அரசு ஏற்பாட்டில் தங்கினர். நடுவர்கள் உள்ளிட்ட, 400க்கும் மேற்பட்டோரும், இவ்வாறு தங்கினர்.இவர்கள் பாதுகாப்பு கருதி, அவர்கள் தங்கிய விடுதிகளில், போலீசார் கண்காணித்தனர். அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால், சிகிச்சை அளிக்க, மருத்துவர், செவிலியர் நியமிக்கப்பட்டனர்.ஆக.,9ல் போட்டி முடிந்ததைத் தொடர்ந்து, அன்றே, சென்னையில் நிறைவு விழாவும் நடந்து, வீரர்கள் பங்கேற்றனர்.அதே நாளில், சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், அவரவர் நாட்டிற்கு புறப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நாட்களில், பிற நாட்டினரும் புறப்பட்டு, அனைவரும் நாடு திரும்பினர்.இவர்களுக்காக, விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில், அனைத்து அறைகளும் பதிவு செய்யப்பட்டு, வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.தற்போது, வீரர்கள், நாடு திரும்பிய நிலையில், போலீசார், மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர், முற்றிலும் விலக்கப்பட்டனர்.விடுதிகள் இயல்புநிலைக்கு திரும்பி, நிகழ்ச்சிகள் நடக்க துவங்கின. போட்டி நடத்தப்பட்ட 'போர் பாயிண்ட்ஸ்' விடுதியில், அரங்க கட்டமைப்புகள் பிரிக்கப்படுகின்றன.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X