ரயில் நிலையங்கள், மாவட்ட எல்லையில் போலீசார்...பாதுகாப்பு! வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றி மக்கள் மரியாதை
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், 75வது சுதந்திர தின விழா இன்று, கோலகலமாக நடக்கிறது. இரு தினங்களாக வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி மக்கள் கொண்டாடி வருகின்றனர். சுதந்திர தின விழாவையொட்டி, ரயில் நிலையம், மாவட்ட எல்லைகளில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தியாவின் 75வது ஆண்டு நிறைவு பெறும் சுதந்திர தினவிழா, அமுத பெருவிழாவாக நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது.

இந்த சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கோடி ஏற்றி, 13ம் தேதி துவங்கி, 15ம் தேதிவரை மரியாதை செலுத்தும்படி, பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசியல்வாதிகள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், மற்றும் மாவட்டத்தில், இரு தினங்களில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 214 வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது என, ஊராட்சிகள் உதவி இயக்குனர் வி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகாமை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், அரசு கட்டடங்கள் உள்ளிட்டவை மின்னொளியில் மின்னுகின்றன.செங்கல்பட்டு என்.ஜி.ஜி., நகரில், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ஆதிசேஷன், மனைவியுடன், வீட்டில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு வேண்பாக்கம் ஐ.டி.ஐ., வளாகத்தில், இன்று காலை 9:00 மணிக்கு தேசிய கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி, தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.மாவட்டத்தில், 359 ஊராட்சிகளில், ஊராட்சி மன்ற அலுவலகங்களில், ஊராட்சி மன்ற தலைவர்கள், தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகின்றனர். இந்த ஊராட்சிகளில், கிராம சபை கூட்டம் நடக்கிறது.எஸ்.பி., சுகுணாசிங் தலைமையில், மாவட்டம் ழுழுதும் 650 போலீசார், மாவட்ட எல்லை, கோவில்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தவிர செங்கல்பட்டு, தாம்பரம், வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார், மறைமலை நகர், சிங்கபெருமாள்கோவில், பரனுார், மேல்மருவத்துார், காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார், 125 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




மாமல்லபுரம்



மாமல்லபுரத்தில் உள்ள பேரூராட்சி, தொல்லியல் உள்ளிட்ட அலுவலகங்கள், கல்பாக்கத்தில் அணுசக்தி வளாகங்கள், நகரிய பகுதிகள், பள்ளிகள்; திருக்கழுக்குன்றம் தாலுகா, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி உள்ளிட்ட அலுவலகங்கள், பள்ளிகள், அனைத்து ஊராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில், இன்று காலை 8:00 மணிக்கு, தேசிய கொடி ஏற்றப்படுகிறது.கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம் பகுதி டச்சுக்கோட்டையில், தொல்லியல் துறை, சுதந்திர தின விழா கொண்டாடுகிறது.




மறைமலை நகர்



மறைமலை நகரில், நகராட்சி அலுவலகம், காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் தனியார் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் கடை, வீடுகளில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.மகிழ்ச்சி அளிக்கிறது

சுதந்திர தின விழாவில், கலெக்டர் அலுவலகம், உள்ளாட்சி அலுவலகங்களில், தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளை நீக்கி, அனைவரும் வீடுகளில், தேசிய கொடி ஏற்ற வேண்டும் என, பிரதமர் உத்தரவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. வீடுகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தியது மகிழ்ச்சியாக உள்ளது.எஸ். ஆதிசேஷன், துணை ஆட்சியர் ஓய்வு, செங்கல்பட்டு.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X