பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு | மதுரை செய்திகள் | Dinamalar
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
Latest district News

மதுரை-''பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது'' என, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் பேசினார்.மதுரையில் சென்ட்ரல் யூனியன் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் மாநில மாநாடு நேற்று துவங்கியது. டி.என்.பி.இ.எப்., பொதுச்செயலாளர் அருணாசலம் துவக்கி வைத்தார்.சென்ட்ரல் வங்கி பொதுமேலாளர் நடராஜன் பேசியதாவது: வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் ஒருங்கிணைந்து தண்டவாளமும், ரயிலும் போல இணைந்து செயல்பட்டால் மட்டுமே இலக்கை சுலபமாக அடையமுடியும், என்றார்.அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம்: பிரதமர் மோடியை மட்டுமே நாங்கள் எதிர்க்கவில்லை. நேரு காலத்திலேயே மத்திய அரசை எதிர்த்திருக்கிறோம்.வங்கி தனியார் மயம் இல்லை எனக் கூறினால், ரோஜாப்பூ மாலையோடு சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவிப்போம். நேரு காலத்தில் இருந்து இன்று வரை வலதும், இடதுமாக இல்லாமல் இருந்த இந்தியா, இன்று வலது திசையை நோக்கியே செல்கிறது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்ககூடாது, என்றார்.டி.என்.பி.இ.எப்., செயலாளர் ராம்பாபு, ஏ.ஐ.ஓ.பி.ஏ., செயலாளர் சஞ்சய் குமார் கான், ஏ.ஐ.டி.யு.சி தமிழக பொதுச்செயலாளர் மூர்த்தி பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X