ஈரோட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடி கொள்ளை; 2 பேர் கைது | ஈரோடு செய்திகள் | Dinamalar
ஈரோட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடி கொள்ளை; 2 பேர் கைது
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 

ஈரோட்டில் வியாபாரி வீடு புகுந்து, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, வடக்கு திண்டல், மாருதி கார்டனை சேர்ந்தவர் சுதாகர், 54; மனைவி, இரு மகன்களுடன் வசித்து வருகிறார். தலைமுடியை சேகரித்து வியாபாரம் செய்து வருகிறார். கர்நாடகா மாநிலம் நஞ்சன்கூடு சிவன் கோவிலில், ஏழு லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்முதல் செய்து, வீட்டில் வைத்திருந்தார்.
கடந்த ஜூலை, 2ல் சுதாகரை தொடர்பு கொண்ட ஒருவர், தலைமுடி வேண்டும் என்று கேட்டு உரையாடிய நிலையில், வீட்டுக்கும் வந்துள்ளார். தலைமுடியை பார்த்த பிறகு, தன் முதலாளியிடம் போன் செய்து கேட்பதாக கூறி, வீட்டை விட்டு சென்றார்.

சிறிது நேரத்தில் நான்கு மர்ம ஆசாமிகள், சுதாகர் வீட்டுக்குள் நுழைந்தனர். சுதாகர், அவர் மனைவி, மகன்களை ஒரே இடத்தில் அமர வைத்தனர். தலைமுடியை தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
பயந்து போன சுதாகர், ஏழு மூட்டைகளில் வைத்திருந்த, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான தலைமுடியை கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டு நான்கு பேரும் சென்றனர். கும்பல் சென்ற பிறகே, வீட்டில் இருந்த மூன்று மொபைல்போன்களும் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். நான்கு பிரிவுகளில் வழக்குப்
பதிந்த போலீசார், மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.
இது தொடர்பாக சென்னை, அம்பத்துார், எஸ்.வி.நகர், கோபால் தெருவை சேர்ந்த பொன்முருகன், 50; செங்குன்றம், ரெட்ஹில்ஸ் பகுதி முருகன், 50, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X