தென்னிந்திய யோகா போட்டி950 போட்டியாளர் பங்கேற்பு | சென்னை செய்திகள் | Dinamalar
தென்னிந்திய யோகா போட்டி950 போட்டியாளர் பங்கேற்பு
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
Latest district News


கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும், கைரளி யோகா வித்யா பீடம் சார்பில், 16ம் ஆண்டு, தென் இந்திய யோகாசன போட்டி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற போட்டியில் தமிழகம் புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, 950 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.முதற்கட்டமாக வயது வாரியாக, 10 பிரிவுகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு, தனித்தனியே யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இறுதியாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. ஆண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை ஆவடியைச் சேர்ந்த நவநீத கணபதி, 14, பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.சஸ்மிதா, 12, ஆகியோர் வெற்றி பெற்றனர். இருவருக்கும் சாம்பியன் கோப்பை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.விழாவில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன், தொழிலதிபர் கிளமன்ட், கைரளி யோகா வித்யா பீடத்தின் நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X