பரலி சு.நெல்லையப்பர் பள்ளியில்அறிவுசார் மைய பணிகள் கொர்ர்ர்
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


குரோம்பேட்டை, குரோம்பேட்டை, பரலி சு.நெல்லையப்பர் பள்ளியை, அறிவுசார் மையமாக மாற்றும் பணிகள் இன்னும் துவக்கப்படாதது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சுதந்திர போராட்ட தியாகி, கவிஞர், எழுத்தாளர், மகாகவி பாரதியாரின் சீடர் என்ற பன்முகம் கொண்டவர் பரலி சு.நெல்லையப்பர். 1950 முதல், தன் இறுதிக் காலமான, 1971ம் ஆண்டு வரை, குரோம்பேட்டையில் வாழ்ந்தார்.அவருக்கு 1954ல் தமிழக அரசு, 3.16 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அதில், 5,000 சதுர அடி நிலத்தை, தொடக்கப் பள்ளி நடத்த, அரசுக்கு தானமாக வழங்கினார். 1968ல் அந்த இடத்தில், தொடக்கப் பள்ளி ஒன்றை அரசு துவக்கியது.பிற்காலத்தில் அப்பள்ளி முடங்கியது. பல ஆண்டுகளாக, அக்கட்டடம் பாழடைந்த நிலையில் கிடந்தது. அதை புதுப்பித்து, மீண்டும் பள்ளியாகவோ அல்லது கல்வி சம்பந்தமான பணிக்காகவோ பயன்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.இதையடுத்து, 'பரலி சு.நெல்லையப்பர் பள்ளி, 2 கோடி ரூபாய் செலவில் அறிவுசார் மையமாக மாற்றப்படும்' என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்த பாழடைந்த கட்டடத்தை இடித்தனர். அதன் பின், எந்த பணியும் நடக்காமல், அப்படியே விட்டுள்ளனர்.எனவே, இவ்விஷயத்தில் மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X