பல்லடத்தில் நள்ளிரவில்ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பல்லடத்தில் நள்ளிரவில்ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 
Latest district News

பல்லடம்:பல்லடத்தில் ஏ.டி.எம்., இயந்திரத்தை செங்கல் கொண்டு உடைத்து நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்தது.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், கோவை-திருச்சி ரோட்டில், ஆக்சிஸ் வங்கி கிளை மற்றும் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று காலை பணம் எடுக்க வந்த ஒருவர், ஏ.டி.எம்., இயந்திரம் உடைந்து கிடப்பது கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' கேமராக்களை பார்வையிட்டனர். நள்ளிரவு, 1:30 மணிக்கு போர்வை போர்த்தியபடி ஒருவர், ரோட்டில் கிடந்த செங்கல்லை எடுத்தபடி ஏ.டி.எம்.,க்குள் நுழைகிறார். ஏ.டி.எம்., இயந்திரத்தை கல்லால் அடித்து உடைக்கும் முயற்சி, தோல்வி அடைந்ததால் சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறுகிறார்.போலீசார் கூறுகையில், 'ஏ.டி.எம்., மையத்தில் செக்யூரிட்டி இல்லை. எச்சரிக்கை அலாரமும் செயல்படவில்லை. கைரேகை மற்றும் 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் விசாரித்து வருகிறோம்' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X