எல்.பி.ஜி.,யாகும்மயான பூமிகள் | சென்னை செய்திகள் | Dinamalar
எல்.பி.ஜி.,யாகும்மயான பூமிகள்
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 


சென்னை, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள 14 மயான பூமிகளை, திரவ பெட்ரோலியம் எனப்படும் எல்.பி.ஜி., தகன மேடையாக மாற்ற, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாநகரை அழகுபடுத்துதல், மேம்படுத்துதல் போன்ற பணிகள், சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் செய்யப்படுகின்றன.அதன்படி மாநகராட்சி, சி.பி.சி.எல்., நகர், புழல், முல்லை நகர், ஜி.கே.எம்., காலனி உள்ளிட்ட 14 மயான பூமிகளை, மின் தகன மேடையிலிருந்து, எல்.பி.ஜி., தகன மேடைகளாக மாற்றம் செய்ய உள்ளது. இதற்காக, 5.67 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பம் கோரப்பட்டுள்ளது.ஒப்பம் முடிவடைந்த பின், உடனடியாக பணிகள் துவக்கப்பட்டு, இந்தாண்டுகள் செயல்பாட்டுக்கு வரும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X