167 ஆண்டு பழமையான ரயில் இன்ஜின் இயக்கம்
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


சென்னை, உலகின் பழமையான ரயில் இன்ஜின் 'இஐஆர்-21'. இங்கிலாந்து நாட்டில், 1855ல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் இன்ஜின் 167 ஆண்டுகள் பழமையானது.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1909ம் ஆண்டு வரை இந்தியாவில் இது ஓடியது.பின்னர், பீஹார் மாநிலம் ஜமால்பூர், மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.உலகில், பயன்பாட்டில் இருக்கும் மிகப் பழமையான ரயில் இன்ஜினான இது, தற்போது சென்னை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் மட்டும் இயக்கப்படுகிறது.இந்நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை நினைவுகூரும் விதமாக, சென்னை எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் வரை, இந்த நீராவி இன்ஜின் ரயில் நேற்று இயக்கப்பட்டது.தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா இதை கொடியசைத்து துவங்கி வைத்தார்.எழும்பூரில் இருந்து நீராவி புகை கக்கியபடி ஹாரன் ஒலித்தபடி புறப்பட்டவுடன், அங்கிருந்து சிறுவர்கள், பயணியர், ரயில்வே பணியாளர்கள் என பலரும், கைதட்டி உற்சாகமடைந்தனர்.புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து மகிழ்ந்தனர். நீராவி ரயில் இன்ஜின் இயக்கத்தில், பயிற்சி பெற்ற ரயில் ஓட்டுனர் பூபதி இயக்கினார். இது குறித்து, தெற்கு ரயில்வே இயந்திர பிரிவு பொறியாளர் அசோக்குமார் கூறியதாவது:இந்திய ரயில்வேயின் வரலாற்றை இளைய சமுதாயத்தினர் தெரிந்து கொள்ளும் வகையில், சிறப்பு ஏற்பாடு செய்து இயக்கப்படுகிறது.இந்த இன்ஜின் தற்போது, மணிக்கு 25 கி.மீ., வேகம் மட்டுமே செல்லும். எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்திற்கு, 5.6 கி.மீ., துாரத்தை 15 நிமிடங்களில் கடந்தது. எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே நேற்று இருமுறை இயக்கப்பட்டது. இதில், 200 பேர் பயணம் செய்து மகிழ்ந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:இந்த பாரம்பரியமிக்க ரயிலில், பயணியரும் பயணிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. முன்பெல்லாம், பொதுமக்களும் பயணிக்க அனுமதி இருந்தது.இதற்காக, கட்டணமும் வசூலிக்கப்பட்டது. தற்போது, இந்த நீராவி ரயிலில் பயணிக்க அனுமதிக்காதது, பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X