மெரினாவில் குளிக்க தடை | சென்னை செய்திகள் | Dinamalar
மெரினாவில் குளிக்க தடை
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 


அண்ணா சதுக்கம், மெரினாவில் கடலில் குளிக்க சென்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.சென்னை, மெரினாவில், நேற்று முன்தினம்மாலை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு சாதாரண உடையில், நடைபயிற்சி மேற்கொண்டார்.அப்போது, முகேஷ் என்ற சிறுவன் கடலில் தத்தளித்து கொண்டிருந்தார். இதை கவனித்த டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சிறுவனை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.இந்த நிலையில், நேற்று விடுமுறை தினத்தையொட்டி, கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. பலர் கடலில் இறங்கி குளிக்க இருந்தனர். தீவிர கண்காணிப்பில் இருந்த ரோந்து போலீசார், கடலில் இறங்கி குளிக்க தடைவிதித்து, எச்சரித்து அனுப்பினர்.தினமும், இது போன்ற நடவடிக்கையில் போலீசார் ஈடுபட வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X