செஞ்சி கோட்டை கோவில் சிலை சேதம்
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



செஞ்சி : செஞ்சி கோட்டை கமலக்கன்னியம்மன் கோவிலில் அம்மன் சிலை சேதப்படுத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ராஜகிரி கோட்டை மீது கமலக்கன்னியம்மன் கோவில் உள்ளது. கோட்டையில் பல கோவில்கள் இருந்தாலும் இவற்றில் சிலைகளோ, வழிபாடோ இல்லை. ஆனால் கோட்டையின் காவல் தெய்வமாக வணக்கப்பட்டு வரும் கமலக்கன்னியம்மன் கோவிலில் மட்டும் வழிபாடு நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு, கோவில் பூசாரி ராமச்சந்திரன் கோவிலுக்கு சென்றார். அங்கு கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீடத்தில் இருந்த சிலையை பெயர்த்து கீழே தள்ளப்பட்டிருந்தது.அம்மனின் கால் பகுதி உடைந்திருந்தது. பூசாரி, யாரிடமும் சொல்லாமல் சிலையை சுவற்றில் சாய்த்து வழக்கமான பூஜைகளை செய்துள்ளார். அதன்பிறகு செஞ்சி கோட்டை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நேற்று மாலை இந்திய தொல்லியல் துறை பராமரிப்பு அலுவலர் நவீந்திரா ரெட்டி செஞ்சி போலீசில் புகார் அளித்தார்.

இந்த தகவல் செஞ்சி பீரங்கி மேடு பகுதியில் தெரிய வந்ததும், இளைஞர்கள் சாலை மறியல் செய்ய திரண்டனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. ஊர் பெரியவர்கள் இளைஞர்களை சமாதானம் செய்தனர்.கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் ஏழுமலை தனியாக இரவு 8:00 மணியளவில் புகார் அளித்தார்.கமலகன்னியம்மன் சிலையை பீடத்தில் இருந்து பெயர்த்த நபர்கள் சிலையின் அடியில் உள்ள நவரத்தினம், தங்கம் உள்ளிட்ட பொருட்களுக்காக பெயர்த்து எடுத்தார்களா அல்லது சமூக விரோதிகள் வேண்டுமென்றே உடைத்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X