மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 



கள்ளக்குறிச்சி : மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற, மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:தமிழகத்தில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சார்ந்தவர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் இந்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22ம் கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவி தொகையும், 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.தகுதியான மாணவ, மாணவியர்கள் பள்ளிப் படிப்பு கல்வி உதவி தொகைத் திட்டத்திற்கு வரும் செப்டம்பர் 30 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகைக்கு வரும் 31ம் தேதி வரையிலும் www.schloarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய அரசின் தேசிய கல்வி உதவி தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விபரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும்.புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய udise/aishe/ncvt குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.கூடுதல் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X