உண்ணாவிரதம் இருக்க முயன்ற நபர்; கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
உண்ணாவிரதம் இருக்க முயன்ற நபர்; கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 
Latest district News


விழுப்புரம் : கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற நபரால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசலாபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரகுராமன், 44; இவர் தனது கிராமத்தில் நடைபெறும் வழிப்பறி, கனிமவள கொள்ளை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கஞ்சனுார் போலீஸ் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்காததால் சில வாரங்களுக்கு முன், கலெக்டர் அலுவலகம் முன் பூசணிக்காய் பலி பூஜை நடத்தினார்.இந்நிலையில், தனது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் ரகுராமனை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X