சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல்வரின் நினைவுப்பரிசு
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



புதுச்சேரி : சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு, சுதந்திர தின விழாவில் முதல்வரின் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித் துறையில், தாய் சேய் பராமரிப்பு, குழந்தை சுகாதாரம், இளம் பருவ சுகாதாரம், தொற்று மற்றும் தொற்றா நோய், தொழுநோய், மலேரியா, டெங்கு, காசநோய் ஆகியவற்றை கண்டறிந்து ஒழிப்பதிலும், நோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இந்தாண்டு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

அதையொட்டி, சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு முதல்வரின் நினைவுப்பரிசு சுதந்திர தின விழாவில் வழங்கப்பட்டது.அதன்படி, ஆரம்ப சுகாதார நிலைய உதவியாளர்கள் பூமிநாதன் (லாஸ்பேட்டை), ஜவகர் (தவளக்குப்பம், சரண்யா (ரெட்டியார்பாளையம்),ஆரம்ப சுகாதார நிலைய துணை செவிலியர் விஜயபாரதி (பாகூர்), நிர்மலா (லாஸ்பேட்டை), பேபி ஸ்ரீவள்ளி (காலாப்பட்டு),ஆரம்ப சுகாதார நிலைய ஆஷா பணியாளர்கள் மகாலட்சுமி (காலாப்பட்டு), ராணி (லாஸ்பேட்டை), வசந்தி (அரியாங்குப்பம்) ஆகியோருக்கு முதல்வரின் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

மேல்நிலை எழுத்தர்
அரசு கலை, பண்பாட்டு துறை மேல்நிலை எழுத்தர் ஜெரோம் செல்வத்திற்கு முதல்வரின் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இவர் கடந்த சட்டசபை தேர்தலில் ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும், மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் வெவ்வேறு திட்டங்களில் செயல்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.



புதுச்சேரி நகராட்சி



ஊழியர்களின் சேவை தொடர்பான விஷயங்களில் புதுச்சேரி நகராட்சி எடுத்த முயற்சிகள் இந்தாண்டு பாராட்டும்படியாக அமைந்தது.நகராட்சி ஊழியர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சேவை தொடர்பான குறைகள் தீர்க்கப்பட்டன. சேவை தொடர்பான குறைகளை திறம்பட அகற்றுவதற்கான வழிமுறை ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது.இதனை பாராட்டி, வழங்கப்பட்ட முதல்வரின் நினைவு பரிசினை, நகராட்சி ஆணையர் சிவக்குமார் பெற்றுக் கொண்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X