புதுச்சேரி : புதுச்சேரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சிறந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதல்வர் ரங்கசாமி விருது, பதக்கம் வழங்கி பாராட்டினார்.
மிகச்சிறந்த பணிக்கான முதல்வரின் காவல் பதக்கம், மாகி ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளி சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் கோபதி, ஏ.டி.ஜி.பி., பிரிவு காவல்துறை ஓட்டுநர் செட்டியன் கண்டியில் கங்காதரன், புதுச்சேரி அயல்நாட்டு மண்டல பதிவு அலுவலக சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோருக்கு வழங்கப் பட்டது.
ராஜிவ்காந்திகாவல் பதக்கம்
சிறந்த பணிக்காக ராஜிவ்காந்தி காவல் பதக்கம், 20 காவலர்களுக்கு வழங்கப்பட்டது.புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து மகளிர் சப் இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா, காவலர் பயிற்சி பள்ளி சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார், காரைக்கால் அதிவிரைவுப்படை சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாகி போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ், பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷன் சிறப்புநிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன்,புதுச்சேரி அதிவிரைவுப் படை ஏட்டு முரளி, திருநள்ளார் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு நடராஜன், புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து பிரிவு ஏட்டு கோவிந்தராஜ்,
புதுச்சேரி தெற்கு போக்குவரத்து பிரிவு மகளிர் ஏட்டு பூரணி ஆகியோர் சிறப்பான பணிக்கான ராஜிவ்காந்தி காவல் பதக்கம் பெற்றனர்.டி.ஜி.பி., அலுவலக சிறப்பு நிலை ஏட்டு ஜெயக்குமரன், புதுச்சேரி ஆயுதப்படை காவலர் பிரபாகரன், முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் காவலர் சிரஞ்சீவி, வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷன் மகளிர் காவலர் தனலட்சுமி, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் மகளிர் காவலர்கள் கயல்விழி, விஜயலட்சுமி, காவலர் பயிற்சி பள்ளி காவலர் கண்ணன், காரைக்கால் அதிவிரைவுப்படை பிரிவு காவலர் சுந்தரமூர்த்தி, இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவு சிறப்பு நிலை ஏட்டுகள் அப்துல்லா, வினோத், பாலமுருகன் ஆகியோருக்கு சிறப்பான பணிக்கான ராஜிவ் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.
சிறந்த காவல் நிலையம்
சிறந்த காவல் நிலையத்திற்கு தலைமை செயலரின் விருது வழங்கப்படுகிறது. முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன், 2021ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது.இதற்கான விருது, ரொக்கப்பரிசு 25 ஆயிரம் ரூபாயை முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசத்திற்கு முதல்வர் ரங்கசாமி வழங்கி பாராட்டினார்.