போதை ஒழிப்பு ஊர்வலம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
போதை ஒழிப்பு ஊர்வலம்
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 
Latest district News



திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் போலீசார் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு ஆட்டோ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.திருக்கோவிலுார் சட்டம் - ஒழுங்கு, மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசார் இணைந்து நடத்திய ஊர்வலத்தில், இன்ஸ்பெக்டர் பாபு வரவேற்றார்.டி.எஸ்.பி., பழனி, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.சந்தைப்பேட்டை டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில், 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்றன. நகரின் முக்கிய வீதிகள் வழியாக, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வலம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சத்தியன் நன்றி கூறினார்.



சங்கராபுரம்



சங்கராபுரம் காவல் துறை சார்பில் சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன் தலைமை தாங்கினார். சங்கராபுரம் நகரில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் தாலுகா அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது. ஊர்வலத்தில், 40 ஆட்டோக்கள் பங்கேற்றன. பின்னர் கடைவீதி மும்முனை சந்திப்பில் போதைத் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழங்கினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X