கிராம சபைக் கூட்டம்: எம்.எல்.ஏ., - கலெக்டர் பங்கேற்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கிராம சபைக் கூட்டம்: எம்.எல்.ஏ., - கலெக்டர் பங்கேற்பு
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 
Latest district News



விழுப்புரம் : கண்டமானடி ஊராட்சியில், கிராம சபைக் கூட்டம் நடந்தது.சுதந்திர தினத்தையொட்டி நடந்த கூட்டத்திற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசுகையில், 'கிராம சபையின் நோக்கம், ஊராட்சி வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பொதுமக்கள் முன்னிலையில் ஒருமனதாக நிறைவேற்றுவது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டால் தான், ஊராட்சிக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தவும், புதிய திட்டங்களை தேர்வு செய்யவும் பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.முன்னதாக, கொண்டாங்கி ஊராட்சியில் அமிர்த சரோவர் திட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் 6.75 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள குளத்தை கலெக்டர் பார்வையிட்டார்.மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

செஞ்சி
மீனம்பூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் முன்வர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய சேர்மன் விஜயகுமார் பங்கேற்றார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, வி.ஏ.ஓ., மணிகண்டன், ஊராட்சி செயலாளர் குமார், ஊராட்சி துணைத் தலைவர் வீரமணி, அலுவலக பற்றாளர் வீரமணி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.திருவம்பட்டு ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மயிலம் பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ஆன்லைன் சூதாட்டம் மற்றும் போதைப் பொருட்களை தமிழக அரசு முற்றிலும் தடை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவலுார்பேட்டை
அவலுார்பேட்டையில் ஊராட்சி தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். பற்றாளர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், வி.ஏ.ஓ., காளிதாஸ், துணைத் தலைவர் சரோஜா ஐயப்பன், வார்டு உறுப்பினர்கள் பங்கேற் றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X