பத்ம விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பத்ம விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 



விழுப்புரம், : விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. கலை, சமூகப்பணி, பொதுசேவை, அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம்,

இலக்கியம், கல்வி, அரசு குடிமைப்பணி, விளையாட்டு மற்றும் இதர தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுகள் வரும் 2023 ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.விழுப்புரம் மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் விபரங்கள் www.padmaawards.gov.in என்ற இணையத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விருது தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் வேலை நாட்களில் நேரிலோ அல்லது 7401703485 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X