விவசாயிகளுக்கு பயிற்சி | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
விவசாயிகளுக்கு பயிற்சி
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 



திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த சடைகட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.திருக்கோவிலுார் வட்டார வேளாண் உழவர் நலத்துறை சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ் நடந்த பயிற்சிக்கு, ஊராட்சி தலைவர் தங்கையன் தலைமை தாங்கினார். வேளாண் உதவி அலுவலர் ஞானவேல், உதவி விதை அலுவலர் சிவனேசன் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும் முறைகள், விதைப் பண்ணை அமைப்பது குறித்து விளக்கினர். ஆத்மா திட்டங்கள் குறித்து தொழில்நுட்ப மேலாளர் சட்டர்ஜி விளக்கினார். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர். உழவர் நண்பர் அலமேலு நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X