யானைகள் அணி வகுத்து தேசியக் கொடிக்கு மரியாதை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
யானைகள் அணி வகுத்து தேசியக் கொடிக்கு மரியாதை
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 
Latest district News


கூடலுார் : நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா நேற்று காலை, 9:00 மணிக்கு நடந்தது. வளர்ப்பு யானைகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் மீது பாகன்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி அமர்ந்திருந்தனர்.

முன்னாள் வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அணி வகுத்து நின்றனர். முதுமலை வனச்சரகர் மனோகரன் தேசியக் கொடியேற்றினார். வன ஊழியர்கள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். அப்போது, வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை துாக்கி, தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின. தொடர்ந்து அங்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில், வனச்சரகர்கள் விஜய், மனோஜ்குமார், பவித்ரா, வனவர் சந்தன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X