திருப்பூரை திரும்பி பார்க்க வைத்த'தினமலர்' நடத்திய மெல்லோட்டம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
திருப்பூரை திரும்பி பார்க்க வைத்த'தினமலர்' நடத்திய மெல்லோட்டம்
Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | |
Advertisement
 
Latest district News

திருப்பூர் : ''சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 'தினமலர்' நாளிதழ் நடத்திய மெல்லோட்டம் இந்திய அளவில் திருப்பூரை முன்னிலைப்படுத்தியுள்ளது'' என, திருப்பூர் மேயர் தினேஷ்குமார் பேசினார்.



திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:திருப்பூரில் 'தினமலர்' நாளிதழ் சார்பில் ஒரு மாபெரும் பேரணியாக பொதுமக்களும், அமைப்புகளும் பங்கேற்ற மெல்லோட்டம் நடந்தது.உணர்வுப் பூர்வமாக தேசப்பற்றாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி, இந்திய அளவில், தமிழகத்தில் திருப்பூரை திரும்பி பார்க்கவும், இதுகுறித்து பேச வைக்கவும் செய்துள்ளது.

வேறு எங்கும், யாரும் முன்னெடுக்காத இதுபோன்ற நிகழ்ச்சி, இங்கு நடைபெற்றது திருப்பூருக்கே பெருமை.இதை நடத்திய 'தினமலர்' நிறுவனத்துக்கும் இணைந்து பங்காற்றிய அமைப்புகளுக்கும் வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பேசுகையில், ''திருப்பூரில் நடந்த சுதந்திர தின மெல்லோட்டம் ஒரு மாபெரும் பேரணியாக இருந்தது. ''திருப்பூர் மக்களின் நாட்டுப் பற்றுக்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக உள்ள இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வரவேற்கத்தக்கது,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X