உலகுக்கே உணவு அளிக்கும் இந்திய தேசம்!சுதந்திர தின விழாவில் சத்குரு பெருமிதம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
உலகுக்கே உணவு அளிக்கும் இந்திய தேசம்!சுதந்திர தின விழாவில் சத்குரு பெருமிதம்
Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
 

தொண்டாமுத்துார்: ''சுதந்திரத்துக்கு முன்பு பல பஞ்சங்களை சந்தித்த நம் பாரதம் வெறும், 75 ஆண்டுகளில் உலகத்துக்கே உணவளிக்கும் வகையில் வளர்ந்துள்ளது,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசினார்.

கோவை ஈஷா யோகா மையம் சார்பில், 75வது சுதந்திர தின விழா, ஆதியோகி சிலை முன் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக, 'காமன்வெல்த்' பொதுச்செயலாளர் பெட்ரிசியா தேசியக்கொடி ஏற்றினார். 'ஜி-20' மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் வெளியுறவுத்துறை செயலருமான ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா முன்னிலை வகித்தார்.ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தலைமைவகித்து பேசியதாவது:



latest tamil news



பஞ்சத்தில் தவித்த நம் தேசம் இப்போது உலகுக்கே உணவு அளிக்கும் நிலையை அடைந்துள்ளது. அரிசி ஏற்றுமதி செய்வதில் முதன்மை நாடாக நாம் உருவெடுத்துள்ளோம். உலகின், 30 சதவீத அரிசி ஏற்றுமதி இந்தியாவில் இருந்து நடக்கிறது. அதேபோல், 1947ல் நம் நாட்டு மக்களின் சராசரி ஆயுள் காலம் வெறும், 28 ஆண்டுகளாக இருந்தது.

இப்போது, 70 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. 2030க்குள், 80 ஆண்டுகளாக அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் தேசத்தில், இத்தகைய மாற்றங்கள் நிகழ்வது சாதாரண விஷயம் அல்ல. பலருடைய தியாகங்களாலும், அர்ப்பணிப்பு மற்றும் உறுதியாலும் இந்த வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது.

உலகளவில் பொருளாதார வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால், மனிதர்கள் உள்நிலையில் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இல்லாமல், பொருளாதார வளர்ச்சியால் பயன் இருக்காது. அது நமக்கும், நம்மை சுற்றியுள்ள உயிரினங்களுக்கும் அழிவை மட்டுமே உருவாக்கும். பொருளாதாரம், வணிகம் மற்றும் அரசியல் என எதுவாக இருந்தாலும், அது மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தியதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X