மின் கட்டணம் உயர்வு எவ்வளவு? கோவையில் இன்று கருத்து கேட்பு!
Added : ஆக 16, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



சென்னை : மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இன்று கோவையில் பொது மக்களிடம் நேரடி கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது.



தமிழக மின் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று, தற்போது உள்ள மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான பல்வகை கட்டணங்களை உயர்த்த, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, மக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.

அதன்படி, முதலாவது கருத்து கேட்பு கூட்டம், கோவை மாவட்டம், அவினாசி சாலை, நவ இந்தியா பஸ் நிறுத்தம் அருகில் உள்ள எஸ்.என்.ஆர்., கல்லுாரி ஆடிட்டோரியத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. அதில் மக்கள் பங்கேற்று, தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.இதைதொடர்ந்து வரும், 18ம் தேதி மதுரையிலும்; 22ம் தேதி சென்னையிலும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
மின் கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட உள்ளது என்ற உத்தேச விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்வுக்கு எதிராக, பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதனால், எந்த பயனும் இல்லை.அதற்கு மாறாக ஆணையம் நடத்தும் கருத்து கேட்பு கூட்டங்களில் பங்கேற்று, மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள், வாரியத்தின் நிதி நெருக்கடியை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக, மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
பலரும் ஒரே கருத்தை ஒட்டுமொத்தமாக அழுத்தமாக தெரிவிப்பதன் வாயிலாக, உத்தேச மின் கட்டண உயர்வு பட்டியல் அப்படியே ஏற்கப்படாமல், ஆணையம், அதை விட குறைந்த அளவில் மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. எனவே, இந்த வாய்ப்பை தவற விடாமல், அதிகம் பேர் கருத்து கேட்பு கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Sivalingam - delhi,இந்தியா
16-ஆக-202210:22:11 IST Report Abuse
Manikandan Sivalingam கோவை மாவட்டத்தின் தொழில் துறைக்கு யூனிட் மின்சாரத்திற்கு ரூபாய் 50 என்ற அளவில் கட்டணம் வசூல்செய்தால் பணக்காரர்களின் கருப்பு பணம் வெளியில் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X