தினமலர் செய்தி எதிரொலி :கருவேல மரங்கள் அகற்றம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
தினமலர் செய்தி எதிரொலி :கருவேல மரங்கள் அகற்றம்
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 
Latest district News



ஆர்.எஸ்.மங்கலம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஆர்.எஸ்.மங்கலம் வாரச்சந்தை அருகே ஊரணியில் ஆக்கிரமித்திருந்த சீமை கருவேல மரங்களை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.



இங்குள்ள வாரச்சந்தை அருகே உள்ள குடிநீர் ஊரணி சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி குப்பை, கழிவுகள் தேங்கியது. ஊரணி முழுவதும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து ஆக்கிரமிப்புகளால் ஊரணி சுருங்கியதோடு ஊரணி நீரை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவர் மவுசுரியா, செயல் அலுவலர் மெய்மொழி ஆகியோர் பார்வையிட்டனர்.ஊரணியை சுற்றிலும் சீமை கருவேல மரங்களை அகற்றினர். சுற்றிலும் இருந்த கட்டட ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து விரைவில் அகற்றப்படும், என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X