முன்னாள் ராணுவத்தினர் உண்ணாவிரதம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
முன்னாள் ராணுவத்தினர் உண்ணாவிரதம்
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 



ஈரோடு : கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் ராணுவத்தினர், சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, உண்ணாவிரதம் இருந்தனர்.


போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வீடு கட்டித்தர வேண்டும். உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன், நேற்று உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தனர்; போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால், தடையை மீறி நடத்துவோம் என அறிவித்தனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சூரம்பட்டி போலீசார் நேற்று காலை, அச்சங்க தலைவர்கள் பழனியப்பன், தீபா ஆகியோரை, வீட்டில் இருந்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.இதையறிந்த முன்னாள் ராணுவத்தினர், சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, உண்ணாவிரதம் இருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X