புத்தகம் வாசிப்பு என்பது வாழ்வியல்: அமைச்சர் மகேஷ் பேச்சு | ஈரோடு செய்திகள் | Dinamalar
புத்தகம் வாசிப்பு என்பது வாழ்வியல்: அமைச்சர் மகேஷ் பேச்சு
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 

ஈரோடு புத்தக திருவிழாவில், நேற்று மாலை நிகழ்வில், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார். இதில் ஸ்ரீராம் சர்மாவின் 'வேலு நாச்சியார்' இசையார்ந்த நடன நாடகம் நடந்தது. அதன்பின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
சட்டசபையில் உள்ள திருவள்ளுவர் வடிவத்தை கொடுத்தவர் ஸ்ரீராம் சர்மாவின் தாத்தா வேணு கோபால் ஷர்மா. வள்ளுவர் எப்படி இருப்பார் என்ற புகைப்படத்தை வரைந்து கொடுத்தவர் அவரது தாத்தா.
புத்தக வாசிப்பு என்பது, அமைதியான வாழ்க்கையை கொண்டு செல்பவர்கள் தேர்வு செய்வதாகும். அதேபோல வேலு நாச்சியார் நாடகம் மூலம் என்ன கேட்கிறார் என்றால், 'வரியை புதிது புதிதாக' செலுத்துவதை எதிர்ப்பதை காணலாம். இப்போதும் அதுபோலத்தானே நடக்கிறது எனலாம்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கலாசாரம், பண்பாடு, மொழி இருக்கிறது. நாங்கள் அரசியலுக்காக எதையும் எதிர்க்கவில்லை. புத்தக வாசிப்பு என்பது பொழுதுபோக்கல்ல. அது வாழ்வியல். வாரம் ஒரு புத்தகம்; மாதம் நான்கு புத்தகங்கள் படியுங்கள் என்கின்றனர். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
பின் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
'பள்ளி அறை பூங்கொத்து திட்டம்' முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. அதை மீண்டும் செயல்படுத்துகிறோம். மாணவர்களுக்கு மனநல ஆலோசனை, கவுன்சிலிங் செயல்படுத்துகிறோம். இதற்காக, 800 மருத்துவர்கள் தேவை. இதற்காக டாக்டர்கள் நியமிக்கும் பணி நேற்று முதல் நடந்து வருகிறது.
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து என்றில்லை. எப்போதும் போல பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும். டெட் தேர்வு எழுதியவர்களின் நியாயமான கோரிக்கையை முதல்வர் பரிசீலிப்பார். தமிழகத்தில் கடந்த பத்தாண்டாக போதை பொருளை ஒழிக்க, கவனம் செலுத்தாததால் அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இவ்வாறு கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X