சுதந்திர தினவிழா கோலாகல கொண்டாட்டம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
சுதந்திர தினவிழா கோலாகல கொண்டாட்டம்
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 


ஈரோடு மாவட்ட சுதந்திர தினவிழா, ஈரோடு வ.உ.சி., மைதானத்தில், நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியேற்றினார். பிறகு போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
சிறப்பாக பணி செய்த, 53 போலீசார், முன்னாள் படைவீரர் ஒருவர், வனத்துறையில், 23 பேர், காலநடை பராமரிப்பு துறையில் ஆறு பேர் உட்பட, 313 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி உட்பட பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளின் வீடுகளுக்கு சென்று, கலெக்டர் உள்ளிட்ட மாவட்ட நிலை அதிகாரிகள் கவுரவித்து, நினைவு பரிசு வழங்கினர்.
75 மீ., கொடியுடன் ஊர்வலம்
கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில், அனைத்து அரசு துறை அலுவலர் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்புடன், சுதந்திர தினவிழா நடந்தது. பேரூராட்சி தலைவர் திலகவதி, துணை தலைவர் ராஜா கமால்ஹசன், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, 75 மீட்டர் நீளம் கொண்ட தேசியக்கொடியுடன் மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊர்வலமாக சென்றனர்.
1,000 மரக்கன்று வழங்கல்
புன்செய்புளியம்பட்டி, சத்தி சாலை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், தலைமை ஆசிரியர் முத்து தேசிய கொடியேற்றினார். ட்ரீ அறக்கட்டளை சார்பில், அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இதில்லாமல் பல்வேறு பள்ளிகளை சேர்ந்தவர்கள் என, 1,000 மரக்கன்று வழங்கப்பட்டது.
கோவிலில் பொது விருந்து
சுதந்திர தினத்தையொட்டி, பண்ணாரியம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், சென்னிமலை சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட கோவில்களில் பொது விருந்து நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உணவு அருந்தினர்.
மாநகர், மாவட்டம் என அனைத்து அரசு அலுவலகலம், உள்ளாட்சி பிரதிநிதிகள் அலுவலகங்களில், சுதந்திர தினவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X