70 ஆயிரம் கன அடியாக குறைந்த காவிரி வெள்ளம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
70 ஆயிரம் கன அடியாக குறைந்த காவிரி வெள்ளம்
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 


மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து குறைந்ததால், ஈரோடு பகுதி காவிரி ஆற்றில், 70,000 கன அடியாக வெள்ளம் குறைந்தது.
மேட்டூர் அணையில் இருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் காவிரி மற்றும் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால், ஈரோடு மாவட்ட கரையோர மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கரை ஓரங்களில் வசித்த, 1,400 பேருக்கும் மேல் பள்ளி, சமுதாய கூடம், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை, 300 பேர் தங்கி இருந்தனர். நேற்று மேட்டூர் அணையில் இருந்து, 65 ஆயிரம் கன அடி; பவானிசாகர் அணையில் இருந்து, 5,400 கன அடி நீர் வெளியேற்றினர். இதனால் ஈரோடு மாவட்ட காவிரியில், 70 ஆயிரம் கன அடியாக வெள்ளம் குறைந்தது.

அம்மாபேட்டை, பவானி, ஈரோடு கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற அனைத்து பகுதி காவிரி ஆற்றிலும் இயல்பு நிலை திரும்பியது. பொதுமக்கள் துணி துவைத்தல், குளித்தல், மீன் பிடித்தல் போன்ற பணிகளில் ஈடுபடத்துவங்கினர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவரும் வீடு திரும்பினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X