விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்கு | ஈரோடு செய்திகள் | Dinamalar
விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்கு
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 


சுதந்திர தினமான நேற்று, ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கடைகள், பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
சுதந்திர தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதா அல்லது பணியில் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதா, ஒரு நாள் மாற்று விடுப்பு வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில், 46 கடைகளை ஆய்வு செய்ததில், 31 கடைகளிலும்; 52 உணவு நிறுவனங்களில், 12லும்; மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில், 12ல் எட்டு என, 88 நிறுவனங்களில் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல், இரட்டிப்பு ஊதியம் வழங்காமல், நிறுவனம் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இந்நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய, உதவி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X