'ஈரோடு புத்தக திருவிழாவில் ரூ.7 கோடிக்கு மேல் விற்பனை' | ஈரோடு செய்திகள் | Dinamalar
'ஈரோடு புத்தக திருவிழாவில் ரூ.7 கோடிக்கு மேல் விற்பனை'
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 


ஈரோடு புத்தக திருவிழாவில், ஏழு கோடி ரூபாய்க்கு மேல் புத்தக விற்பனை நடந்ததாக தெரிவித்தனர்.
ஈரோட்டில், 5ம் தேதி முதல் சி.என்.கல்லுாரி வளாகத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதுகுறித்து பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், நேற்று கூறியதாவது:

ஈரோடு புத்தக திருவிழா நாளை (இன்று) இரவுடன் நிறைவடைகிறது. கடந்த முறை நான்கு லட்சம் மாணவர்கள் உட்பட, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். இந்தாண்டும் அந்த எண்ணிக்கையை விட கூடுதலாக வந்துள்ளனர். மலேசியா, நார்வே, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாட்டினரும் வந்து புத்தகம் வாங்கி சென்றுள்ளனர். கடந்த முறை நடந்த புத்தக திருவிழாவில், 7 கோடி ரூபாய்க்கு நுால்கள் விற்பனையானது. இந்தாண்டு அதைவிட கூடுதலான தொகைக்கு விற்பனையாகி உள்ளது. இவ்வாறு கூறினார். பேரவை செயலாளர் அன்பரசு, பொருளாளர் அழகன் உடனிருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X