சுவாமி ஊர்வலத்தில் லாரி புகுந்தது பெண் உள்பட ௨ பேர் இறந்த சோகம் | தர்மபுரி செய்திகள் | Dinamalar
சுவாமி ஊர்வலத்தில் லாரி புகுந்தது பெண் உள்பட ௨ பேர் இறந்த சோகம்
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 

கடத்துார் அருகே, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சுவாமி ஊர்வலத்தில்
புகுந்ததில், பெண் உட்பட இருவர் இறந்தனர்.
தர்மபுரி மாவட்டம், கடத்துாரை அடுத்த சில்லாரஹள்ளியில், பச்சியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் நடந்தது.
அலங்கரித்த அம்மனை டாடா ஏஸ் வாகனத்தில் வைத்து, அப்பகுதி மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது அவ்வழியே வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து டாடா ஏஸ் வாகனத்தின் பின்பக்கமாக மோதி, ஊர்வலத்திலும் புகுந்தது. இதில் டாடா ஏஸ் வாகன டிரைவர் செந்தில்குமார், 45; ஊர்வலத்தில் சென்ற சுப்பிரமணி, 56, கோவிந்தம்மாள், 54, உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஐந்து பேரும் சேர்க்கப்பட்டனர். இதில் நேற்று அதிகாலை சுப்பிரமணி, கோவிந்தம்மாள் இறந்தனர். கடத்துார் போலீசார் வழக்குப்
பதிந்து, விபத்தை ஏற்படுத்தி தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X