கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை 80 மீட்டருக்கு விரிசல்: அதிகாரிகள் ஆய்வு | நீலகிரி செய்திகள் | Dinamalar
கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை 80 மீட்டருக்கு விரிசல்: அதிகாரிகள் ஆய்வு
Added : ஆக 16, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
Latest district News

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, சனீஸ்வரன் கோவில் அருகே, சில தினங்களுக்கு முன், சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (ஆ., 16) விரிசல் மேலும், அதிகரித்து இருந்தது.தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் செல்வம், சேலம் தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் குப்புசாமி, உதவி கோட்ட பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் பிரேம்குமார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், சாலையில் 80 மீட்டர் தூரம் விரிச்சல் ஏற்பட்டதுடன், சாலையிலிருந்த 100 மீட்டர் தாழ்வான பகுதியில், தனியார் தேயிலை தோட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த விரிசல் மேலும், அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், விரிசல் ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்துள்ளோம். இப்போதைக்கு சாலையில் வாகனங்கள் செல்வதால் பாதிப்பு இல்லை. அப்பகுதியை புவியியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில், அப்பகுதியில் மேற்கொள்ள நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்' என, கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X