3 மணி நேரம் நடுவழியில் நின்ற ரயில்கள் | வேலூர் செய்திகள் | Dinamalar
3 மணி நேரம் நடுவழியில் நின்ற ரயில்கள்
Added : ஆக 17, 2022 | |
Advertisement
 

வேலுார்:வேலுார் அருகே அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியால், மூன்று மணி நேரம் நடுவழியில் ரயில்கள்நிறுத்தப்பட்டன.

வேலுார் அருகே, சேவூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மாலை, 4:30 மணிக்கு ரயில்களை இயக்க தேவைப்படும் மின்சாரத்தை வழங்கும் உயர் மின் அழுத்த கம்பி, திடீரென அறுந்து விழுந்தது.இதனால், அப்பகுதியிலுள்ள மின் கம்பங்களில் தானாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அப்போது, சென்னையிலிருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சேவூரில் தானாகவே நின்றது.தகவலின்படி அரக்கோணத்திலிருந்து, 'டவர் வேகன்' வண்டி மூலம் வந்த ரயில்வே பொறியாளர்கள், அறுந்து கிடந்த மின் கம்பியை சரிசெய்தனர்.

இதையடுத்து, மூன்று மணி நேரம் தாமதமாக இரவு, 7:30 மணிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது.இதனால், அந்த ரயிலுக்கு பின்னால் சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த திருவனந்தபுரம், லால்பாக், பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.பலமான காற்று அடித்ததால், மின் கம்பி அறுந்து விழுந்தது விசாரணையில் தெரிந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X