போலீசாரின் கொடூர தாக்குதலால் தந்தை, மகன் மரணம்:சாத்தான்குளம் வழக்கில் சி.பி.ஐ., துணை குற்றப்பத்திரிகையில் தகவல்
Added : ஆக 17, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மதுரை:'சாத்தான்குளத்தில் தந்தை, மகனை போலீசார் கொடூரமாக தாக்கியதால் தான் இருவரும் இறந்தனர்' என, மதுரை நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது.

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில், கொரோனா ஊரடங்கு காலத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகும் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சை போலீசார், 2020 ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர். இதை சி.பி.ஐ., விசாரிக்கிறது.

இந்த கொலை தொடர்பாக, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுக்கள் முருகன், சாமத்துரை, போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.தந்தை, மகன் மரணம் தொடர்பாக கொலை மற்றும் முறையற்று சிறையில் வைத்தல், பொய் சாட்சியம், சாட்சியத்தை மறைத்தல் பிரிவுகளில் சி.பி.ஐ., வழக்குப் பதிந்தது.

மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட ஒன்பது பேர்மீது குற்றப்பத்திரிக்கையை 2020 செப்டம்பரில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது.சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை தொடர்கிறது.

தற்போது சி.பி.ஐ., தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. அது, புதுடில்லி மத்திய தடய அறிவியல் ஆய்வக நிபுணர் அறிக்கை வாயிலாக தெளிவாகிறது.

இவ்வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ள போலீசார் மிகவும் கொடூரமாக தந்தை, மகனை சித்ரவதை செய்துள்ளனர். காயங்களால் இருவரும் இறந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டின் நீதி விசாரணை முடிவுகளுடன், சி.பி.ஐ., விசாரணையின் முடிவுகள் ஒத்துப்போகின்றன.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட ஒன்பது பேரும் கூட்டுச் சதி செய்து ஜெயராஜ், பென்னிக்சை சட்டவிரோதமாக காவலில் வைத்தனர். இருவர் மீதும் பொய் வழக்கு பதிந்துள்ளனர்.ஸ்டேஷன் கதவுகளை அடைத்து விட்டு தந்தை, மகனை கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர். இதனால் இருவர் உடல்களிலிருந்தும் வெளியேறிய ரத்தம் தரை, சுவர்களில் பரவியது.அதை லுங்கியால் சுத்தம் செய்யுமாறு பென்னிக்சை போலீசார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

சாட்சியங்கள், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் வேண்டுமென்றே இவ்வாறு போலீசார் செயல்பட்டுள்ளனர்.ரத்தக்கறை படிந்த துணிகளை மருத்துவமனையின் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். தந்தை, மகனுக்கு மரணத்தை ஏற்படுத்தி உள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X