ஆடி மாத கடைசி செவ்வாய்; அம்மன் கோயில் வழிபாடு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ஆடி மாத கடைசி செவ்வாய்; அம்மன் கோயில் வழிபாடு
Added : ஆக 17, 2022 | |
Advertisement
 
Latest district News

ராமநாதபுரம் : நேற்று ஆடி கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் நெய், எலுமிச்சை தீபமேற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பெரியமாரியம்மன் கோயிலில் மூலவர், உற்ஸவருக்கு பால், பன்னீர், பழங்களால் அபிேஷகம் செய்து சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. சேதுபதிநகர் மல்லம்மாள் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிேஷகம் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன.முகவை ஊரணி ராஜகாளியம்மன், கேணிக்கரை ருத்ரமா தேவி, ஓம்சக்திநகர் ஒத்த பனைமரத்து காளியம்மன் கோயில், ராமநாதபுரம் வடக்கு தெரு தேவி கருமாரியம்மன்கோயில், அண்ணாநகர் சந்தனமாரியம்மன் கோயில், ராமேஸ்வரம் ரோடு ரயில்வே பாலம் வெட்டுடையார் காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. எலுமிச்சை மாலை சாற்றியும், வேப்பிலை, மஞ்சள் பால் அபிேஷகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X