மது பாட்டில் பறிமுதல்
Added : ஆக 17, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மது பாட்டில் பறிமுதல்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் எஸ்.ஐ., ராமபாண்டியன் தலைமையிலான போலீசார் துாரி மதுபான கடை அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்பனைக்கு பதுக்கிய 426 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கீழத்தூவலை சேர்ந்த பாலமுருகன் 28, என்பவரை கைது செய்தார்.

கண்மாயில் ஆண் உடல்

சத்திரக்குடி: பரமக்குடி அருகே சத்திரக்குடியில் மாவிலங்கை கண்மாய் உள்ளது. இங்கு நேற்று மாலை அடையாளம் தெரியாத 40 வயதுள்ள ஆண் இறந்து கிடந்தார். கருப்பு வேட்டி, சிகப்பு சட்டை அணிந்துள்ளார். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

டிரைவர் தற்கொலை
கீழக்கரை: கீழக்கரை அருகே சின்னமாயாகுளம் இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் 35. கீழக்கரையில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தவர். மது அருந்திவிட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

விரக்தியில் தற்கொலை
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் சீனி 55. இவரது மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், மகனும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.

மன நலம் பாதித்தசிறுமி பலாத்காரம்: ஒருவர் கைது
தொண்டி: தொண்டி அருகே கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. மனநிலை பாதிக்கபட்ட இவர் நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி 45, என்பவர் வீட்டில் நுழைந்து சிறுமியை பலாத்காரம் செய்தார்.சிறுமியின் தாய் புகாரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் ஆசைத்தம்பியை கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X