அ.தி.மு.க.,வினர் சிக்குவர்! அமைச்சர் துரைமுருகன் ஆரூடம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
அ.தி.மு.க.,வினர் சிக்குவர்! அமைச்சர் துரைமுருகன் ஆரூடம்
Added : ஆக 17, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
 
Latest district News

வேலுார் : ''கஞ்சா, குட்கா கடத்தல் வழக்குகளில், அ.தி.மு.க.,வினர் பலர் சிக்குவர்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.



வேலுார் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரத்தில்நடந்த விழாவில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த, 10 ஊராட்சி தலைவர்களுக்கு விருது வழங்கிய அவர், நிருபர்களிடம் கூறியதாவது:




தமிழக நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசியது, பா.ஜ.,வின் பண்பை காட்டுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை குற்றங்கள் மற்றும் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலைகளை, அவர்கள் ஆட்சியில் கண்டுகொள்ளவில்லை.

கஞ்சா, குட்கா அதிகளவு கடத்தப்பட்ட, அ.தி.மு.க., ஆட்சியில், அது குறித்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன. அ.தி.மு.க., வினர் பலர் சம்பந்தப்பட்டுள்ள இந்த வழக்குகளை, தி.மு.க., அரசு, சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், அ.தி.மு.க.,வினர் பலர் சிக்குவர். இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X