ஊராட்சி அலுவலகத்தில் ஜன்னல், கதவு திருட்டு | கடலூர் செய்திகள் | Dinamalar
ஊராட்சி அலுவலகத்தில் ஜன்னல், கதவு திருட்டு
Added : ஆக 17, 2022 | |
Advertisement
 
Latest district News



வேப்பூர் : வேப்பூர் அருகே ஊராட்சி அலுவலகத்தில் இரும்பு கதவு மற்றும் ஜன்னல்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள ஊராட்சி அலுவலக கட்டடம் பழுதடைந்ததால், அருகிலுள்ள நுாலகத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள், பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தில் இருந்த 6 இரும்பு ஜன்னல்கள், 2 இரும்பு கதவுகளை உடைத்து திருடி சென்றனர்.தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X