துணை மின் நிலையம் தரம் உயர்த்தல் காணொலி மூலம் முதல்வர் துவக்கி வைப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
துணை மின் நிலையம் தரம் உயர்த்தல் காணொலி மூலம் முதல்வர் துவக்கி வைப்பு
Added : ஆக 17, 2022 | |
Advertisement
 
Latest district News



செஞ்சி : கீழ்பாப்பாம்பாடி துணை மின் நிலையத்தின் திறனை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புதிய துணை மின் நிலையங்களையும், துணை மின் நிலையங்களின் திறன் உயர்த்தி தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.இதில் செஞ்சி அடுத்த கீழ்பாப்பாம்பாடி துணை மின் நிலையத்தில் 8 மெகா ஓல்ட் ஆம்ஸ் திறனை, மேலும் 8 மெகா ஓல்ட் ஆம்ஸ் திறன் கொண்ட துணை மின் நிலையமாக தரம் உயர்த்தி துவக்கி வைத்தார்.

இதையடுத்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் குத்து விளக்கேற்றி, புதிய மின் மாற்றியை இயக்கி வைத்தார். எம்.எல்.ஏ., சிவக்குமார் முன்னிலை வகித்தார்.ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய், செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா, உதவி செயற்பொறியாளர்கள் ஜெகன்மோகன், ராஜேஸ்வரி, குமரவேல், உதவி மின் பொறியாளர்கள் சதீஷ், கார்த்திகேயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளவழுதி, நெடுஞ்செழியன், ஊராட்சி தலைவர் நாகமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X