மின் கட்டணம் உயர்த்தினால் பாதிப்பு தான்: கருத்து கேட்பு கூட்டத்தில் தொழில்துறையினர் ஆதங்கம்
Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: 'மின் கட்டணத்தை உயர்த்தினால், கோவையில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும்' என, மின் கட்டண உயர்வு கருத்து கேட்பு கூட்டத்தில், தொழில்துறையினர் ஆதங்கம் தெரிவித்தனர்.



latest tamil news



தமிழகத்தில், மின் கட்டண உயர்வு அறிவிப்பு, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்காக, மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலாவது கருத்து கேட்பு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த தொழில் துறையினர் பங்கேற்றனர்.

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி, இயக்குனர் சீனிவாசன், பிரபாகரன், மனோகரன் ஆகியோர் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

விசைத்தறி உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'மின் கட்டணம் உயர்ந்தால் செலவுகள் அதிகரிக்கும். ஏற்கனவே இங்கு வர வேண்டிய ஆர்டர்கள், குஜராத்துக்கு சென்றுவிட்டன. மிகவும் குறைந்த அளவு ஆர்டர்களே இங்கு வருகின்றன. மின் கட்டணத்தை உயர்த்தினால், தொழிலாளர்களை நிறுத்தி விட்டு நாங்களே தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இப்போதைக்கு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்' என்றனர்.

வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஏற்கனவே சொத்து வரி உயர்த்தப்பட்டதால், மிகவும் சிரமத்தை சந்தித்துள்ளோம். மின்கட்டணமும் உயர்த்தப்பட்டால், எங்கள் தொழில் மட்டுமல்லாமல், கோவையில் பெரும்பாலான தொழில்கள் கடும் பாதிப்படையும்' என்றனர்.






மோட்டார் பம்ப் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'மோட்டார் பம்ப் உற்பத்திக்கான ஜி.எஸ்.டி., வரி, 12 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஜாப்-ஆர்டர்கள் குறைந்துள்ளது. இந்நிலையில், மின் கட்டணம் உயர்த்தினால், தொழில் பாதிக்கப்படும்' என்றனர்.தொடர்ந்து, தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்பினர், தொழில்துறையினர் என, 100க்கும் மேற்பட்டோர், கருத்துக்களை தெரிவித்தனர். மதுரை மற்றும் சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.



கண் துடைப்பு தான்!



கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்கள், 'அரசு மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் இங்கு தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, மின் கட்டண உயர்வை திரும்ப பெறாது என்பது எங்களுக்கு தெரியும். இருந்தும், இதுபோன்ற கண்துடைப்பு கூட்டங்கள் எதற்கு என்று தெரியவில்லை' என, ஆதங்கம் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஆக-202211:52:33 IST Report Abuse
Bhaskaran செவிடன் காதில் ஊதிய சங்குதான்
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
17-ஆக-202211:34:03 IST Report Abuse
Nakkeeran மின் கட்டணத்தை உயர்த்துவது என்பது உறுதியான ஒன்று .இதுவும் All Kaatti ராஜன் கம்மிட்டீ போலத்தான்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
17-ஆக-202210:52:57 IST Report Abuse
duruvasar மத்திய அரசின் அழுத்தம் கொடுத்த அந்தக்கடிதத்தை யாராவது கேட்டு படித்து பார்தார்களா என தெரியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X