600 எக்டேர் அறுவடைக்கு தயார்; நெல் கொள்முதல் மையம் திறப்பு எப்போது
Added : ஆக 17, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மதுரை : 'ஆக.2 வது வாரம் முதல் இறுதி வரை மதுரையில் 568 எக்டேரில் குறுவை நெல் சாகுபடி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால் கொள்முதல் மையம் விரைவில் திறக்க வேண்டும்' என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.



கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 300 எக்டேர் பரப்பில் நெல் குறுவை சாகுபடி குறைந்துள்ளது. இந்தாண்டு ஏப்ரல் கடைசியில் இருந்து ஜூன் வரை 9436 எக்டேர் பரப்பில் நடவுப் பணி முடிந்தது. ஆக. 2 வது வாரம் முதல் அக்., வரை அறுவடை பணி நடைபெறும்.தற்போது மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, மேலுாரில் 600 எக்டேரில் 3500 டன் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கடந்தாண்டு 19 நெல்கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.

தற்போது மையம் இதுவரை திறக்காதது குறித்து விவசாயிகள் கூறியதாவது:இயந்திரம் கிடைக்க கிடைக்க அறுவடையை தொடங்கி விடுவோம். அறுவடை செய்த நெல்லை சேகரித்து வைப்பது சிரமம். திடீரென மழை வந்தால் பாதுகாக்க முடியாது. எனவே, தாமதமின்றி கொள்முதல் மையம் திறந்தால் உடனே எடையிட்டு நெல்லை விற்று விடுவோம்.

கொள்முதல் மையத்தில் திறந்தவெளியில் மூடைகள் குவித்து வைப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். பாடுபட்டு விளைவித்து விற்றாலும் மூடைகள் மழையில் நனைந்து நெல் முளைவிட்டால் அரசுக்கும் நஷ்டம் தான். கொள்முதல் மையத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு மைய நபர்களைத் தவிர வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது, என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X