மதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
Added : ஆக 17, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மதுரை, : மதுரை மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், தன்னார்வ மையங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளும் 75வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை ஆர்வத்துடன் கொண்டாடின.அரசு அலுவலகங்கள்தோப்பூர் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட ரமணி கொடியேற்றினார். நோய் துயர் தணிப்பு மைய நோயாளி லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் அணிவகுப்பு நடந்தது.மதுரை ஜி.எஸ்.டி., ஆணையரகத்தில் கமிஷனர் சுதா கோகா கொடியேற்றினார். குழந்தைகள் காப்பகத்தையும் திறந்தார். பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கினார். ஜி.எஸ்.டி., மத்திய கலால் கூடுதல் கமிஷனர் வெங்கடேஷ்வரன் பங்கேற்றார்.உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் கொடியேற்றினார். சி.ஐ.எஸ். எப்., படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி வடமலை கொடியேற்றினார். உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி பி .என். பிரகாஷ் மரக்கன்றுகளை நட்டனர்.மாவட்ட ஊராட்சி அலுவலக விழாவில் தலைவர் சூரியகலா கொடியேற்றினார். கவுன்சிலர்கள், ஊரக வளர்ச்சித்துறையினர் பங்கேற்றனர். கோவில்பாப்பாகுடியில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சரவணன், துணைத்தலைவர் சோணை, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, விழிப்புணர்வு கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜ்குமார், குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் சோபனா, சைல்டு லைன் உறுப்பினர் செல்வி, ஊராட்சி செயலர் மகேஷ் பங்கேற்றனர்.தல்லாகுளம் கால்நடை மருத்துவமனையில் இணை இயக்குநர் நடராஜகுமார் கொடியேற்றினார். உதவி இயக்குனர் சரவணன், முதன்மை டாக்டர் வைரவ சாமி, உதவி இயக்குனர் ஜோசப் அய்யாதுரை, உதவி டாக்டர்கள் விஜயகுமார், முத்துராம், அறிவழகன், முத்துராமன், மேற்பார்வையாளர் வித்யாலட்சுமி, உதவியாளர்கள் நிர்மலா, சண்முகத்தாய் பங்கேற்றனர்.கட்சிகள்ஏ.பி.வி.பி., சார்பில் பல்வேறு இடங்களில் தென் மாநில செயலாளர் கோபி கொடியேற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராஜ், நகர் செயலாளர் செந்துார்பாண்டியன், அருண்முத்து குமார், ஸ்ரீதர், மாணவர்கள் பங்கேற்றனர்.மதுரை எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநிலச்செயலாளர் நஜ்மா பேகம் கொடியேற்றினார். வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன், செயலாளர் கமால் பாட்சா, துணைத் தலைவர் ஜாபர் சுல்தான், செயற்குழு உறுப்பினர்கள் சிக்கந்தர், இம்தியாஸ் அகமது பங்கேற்றனர். உமன் இந்தியா மூவ்மென்ட் விழாவில் வடக்கு மாவட்ட தலைவர் கதிஜா இப்ராஹிம், பொதுச் செயலாளர் சையது அலி பாத்திமா, எஸ்.டி.டி.யூ., தொழிற்சங்க தலைவர் நிசார், கவுன்சிலர் ராஜா உசேன் பங்கேற்றனர்.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா விழாவில் மாநில துணைத் தலைவர் காலித் முகமது கொடியேற்றினார். எஸ்.டி.டி.யூ., மாநில துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர், தலைவர் முகம்மது அபுதாஹிர், எஸ்.டி.பி.ஐ., மண்டல செயலாளர் முஜிபூர் ரஹ்மான், தலைவர் சீமான் சிக்கந்தர், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் முகமது இப்ராஹிம், தலைவர் நிஷார் அஹமது பங்கேற்றனர். மதுரை தெற்கு எஸ்.டி.பி.ஐ., சுதந்திர தின விழாவில் தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் மண்டல செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கொடியேற்றினார். தியாகி நவாப் ஜான், செயலாளர் ஆரிப் கான், பொருளாளர் அப்துல் கபூர், பாதிரியார் தேவேந்திர குமார் பங்கேற்றனர்.பொதுநல அமைப்புகள்மதுரை சொக்கிகுளம் விஷால் டி மாலில் நடந்த விழாவில் மெக்குரோத்ஸ் டெக்ஸ் நிர்வாக இயக்குனர் அருணாசலம் கொடியேற்றினார். விஷால் புரோமோட்டர்ஸ் இயக்குனர் ராஜரத்தினம், நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.மதுரை சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கம் சார்பில் தலைவர் ஐகுவா கொடியேற்றினார். முன்னாள் ராணுவ வீரர் ராஜசேகரன், பொது செயலாளர் தினேஷ், தலைவர் சரவணன் பங்கேற்றனர்.மதுரை நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு, மக்கள் பொதுநல அறக்கட்டளையின் சுதந்திர தின விழாவில் நிறுவனர் அபுபக்கர் கொடியேற்றினார். பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு பேனா, பென்சில், இனிப்பு வழங்கப்பட்டது. நிர்வாகிகள் சங்கரபாண்டி, பாலகுரு, தன்ராஜ், மாரிமுத்து பங்கேற்றனர்.மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் சார்பில் தெற்குவாசல் முகையதீன் ஆண்டவர் தர்கா பள்ளி வாசலில் காஜியார் காஜா மொய்னுாதீன் கொடியேற்றினார். ராஜா ஹசன், மாவட்ட ஜமாதுல் உலமா தலைவர் சாகுல் ஹமீது, ஐக்கிய ஜமாத் செயலாளர் நிஷ்தார் அஹமது, பொருளாளர் அப்துல் காதர் பங்கேற்றனர்.மதுரை தானம் அறக்கட்டளையில் நிர்வாக இயக்குனர் வாசிமலை கொடியேற்றினார். களஞ்சிய தலைவிகள், வளர் இளம்பெண்கள் குழுவினர் பங்கேற்றனர்.தானம் மக்கள் கல்வி நிலையத்தில் பொதிகை வட்டார களஞ்சிய துணை தலைவி பூங்கொடி கொடியேற்றினார். பேராசிரியர் கண்ணன், அலுவலர்கள் பங்கேற்றனர். டி.மலபட்டி தானம் கல்வி நிலையத்தில் இயக்குனர் குருநாதன் கொடியேற்றினார்.ஆனந்த நகர், அமிர்தா நகர் சங்கத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஆடிட்டர் மாடசாமி கொடியேற்றினார். வெற்றிலை பாக்கு பீடி சிகரெட் வர்த்தகர் சங்கத்தினர் சுதந்திர தின விழாவில் தலைவர் சங்கர் கொடியேற்றினார். நிர்வாகிகள் அய்யாதுரை, சோலைராஜ், ரவிச்சந்திரன், கிருஷ்ண குமார் பங்கேற்றனர்.ஆதித்யா கிளாத்திங் கம்பெனி குரூப் ஆப் ராம்ராஜ் காட்டன் நிறுவன ஊழியர்கள் தேசியக்கொடி ஏற்றி, விளையாட்டு போட்டிகளை நடந்தி பரிசு வழங்கினர்.காபி டீ வர்த்தகர் சங்க அலுவலகத்தில் தலைவர் முத்து மாணிக்கம் கொடியேற்றினார். நிர்வாகிகள் சங்கர், சுகுமாரன், மீனாட்சி சுந்தரேஷ், சுப்பிரமணியன், சோலைராஜ், செல்லம் பிள்ளை பங்கேற்றனர்.மதுரை திருநகர் சீனிவாஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் விழாவில் வெங்கடேஷ், பாபு, அமர்நாத், பயிற்சியாளர்கள் சரவணன், அருண், முத்து பங்கேற்றனர். ஞான ஒளிவுபுரம் புனித வளனார் சர்ச்சில் பாதிரியார் ஜோசப் ஆரோக்கியராஜ் கொடியேற்றினார். உதவி பாதிரியார் ஆனந்த், பேரவை செயலர் சேவியர் பங்கேற்றனர். மதுரை சிங்கராயர் காலனி சங்கத்தில் தலைவர் சென்றாயன், செயலாளர் சையது அப்துல் காதர், முகுந்தன், சங்கரலிங்கம், அசோக், துணைத் தலைவர்கள், மோகனசுந்தரம், மதி ஜாஹிர் கலந்து கொண்டனர். அழகப்பன் நகர் குடியிருப்போர் சங்கத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி ஓய்வு பேராசிரியர் சண்முகம் கொடியேற்றினார். தலைவர் கிருஷ்ணன், செயலாளர் ராமலிங்கேஷ்வரன்,பொருளாளர் சந்தானம், ஓய்வு நீதிபதி ஜான் சந்தோஷம், ஆடிட்டர் லட்சுமணன் பங்கேற்றனர்.தமிழ்நாடு பிராமணர் சமாஜம் சார்பில் எஸ்.எஸ்.காலனி மாவட்ட பொதுச்செயலாளர் இல்லத்தில் மாவட்ட தலைவர் ரவி கொடியேற்றினார். மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீராமன் பங்கேற்றார். அச்சம் பத்து ஜெயபாரத் கிளாசிக் சிட்டி வீட்டு உரிமையாளர் நலச்சங்கத்தில் உயர்கல்வித்துறை இணை இயக்குனர் முத்துராமலிங்கம் கொடியேற்றினார். நிர்வாகிகள் பிரேம் சந்தர், செயலாளர் ராம லட்சுமணன், கோபாலகிருஷ்ணன், டேவிட், ராஜேஷ், ராஜ்குமார், தியாகராஜன், பரசுராமன் பங்கேற்றனர். மதுரை ஜெயபாரத் ஹோம்ஸ்நிறுவன விழாவில்இயக்குநர் ஜெயக்குமார் கொடியேற்றினார்.மதுரை விசுவ ஹிந்து பரிஷத், கிராம கோவில் பூசாரிகள் பேரவை விழாவில் அருள் வாக்கு அருள்வார் பேரவை தலைவர் சந்திரசேகரன், துணைத் தலைவர் கணேசன், வழக்கறிஞர் வேலுமணி, முருகன், பூசாரிகள் மலைச்சாமி, ராதாகிருஷ்ணன், முத்துகுமார், கணேஷ், தவமணி பங்கேற்றனர்.மதுரை கோச்சடை பிருந்தாவன் ஹோம்ஸ் குடியிருப்பில் ஓய்வு தாசில்தார் வின்சென்ட் கொடியேற்றினார். மதுரை பைபாஸ் ரோடு வஜ்ரா குடியிருப்பு சுதந்திர விழாவில் சங்க உதவிச்செயலாளர் வாசுதேவன் கொடியேற்றினார். விஸ்வாஸ் புரோமோட்டர்ஸ் மேலாண்மை இயக்குனர் சீத்தாராமன், பொதுச் செயலாளர் பிரசன்ன ராணி பங்கேற்றனர்.மதுரை ரேஸ்கோர்ஸ் ஜாக்கிங் கிளப்பில் தலைவர் அழகு கொடியேற்றினார். முன்னாள் தலைவர் கதிரேசன், பொருளாளர் போஸ் ராஜன், தேவராஜன், செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன். கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம், துணை தலைவர் வசந்தவேல், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பாண்டியன், கற்பூரம், வேலு, சதீஷ்குமார் பங்கேற்றனர். சூர்யா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தில் கொடியேற்றி பூங்காவில் அமைக்கப்பட்ட ராட்டினத்தை கவுன்சிலர்கள், முத்துக்குமாரி, ராதிகா துவக்கி வைத்தனர். ஜெகநாதன், ரவிச்சந்திரன் பங்கேற்றனர். எல்லீஸ் நகர் ஜீபிடர் குடியிருப்போர் சங்க செயலாளர் மாடசாமி கொடியேற்றினர். தலைவர் ராமனாதன், நிர்வாகிகள் ராஜீ, சுரேஷ், சுப்பிரமணியன், வைத்தியநாதன் பங்கேற்றனர்.பள்ளிகள்சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் பூர்ணிமா காந்தி மியூசியத்தில் சிலைக்கு மாலை அணிவித்தார். காந்தி மியூசிய செயலாளர் நந்தராவ், நிர்வாகி விஸ்வநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம் ஆனந்த் நர்சரி பள்ளியில் முன்னாள் ராணுவ வீரர் ராமலிங்கம் கொடியேற்றினார். ராணுவ மருத்துவ அதிகாரி ராமர் பாண்டி, தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, ஆசிரியர் மகேஸ்வரி பங்கேற்றனர்.திருநகர் இந்திராகாந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஊழியர் குருவம்மாள் கொடியேற்றினார். தோப்பூர் சிவானந்தா வித்யாலயா தொடக்கப்பள்ளியில் டி.எஸ்.பி., வசந்த குமார் கொடியேற்றினார். சுவாமிகள் சிவானந்தா சுந்தரானந்த மஹராஜ், இராமானந்த மஹராஜ், திருப்பரங்குன்றம் தாசில்தார் பார்த்திபன், துணைத் தாசில்தார் ராஜேஷ், பள்ளி முதல்வர் கண்ணன் பங்கேற்றனர். தபால்தந்தி நகர் பால மந்திரம் மேல்நிலைப்பள்ளி செயலாளர் சோமசுந்தரம் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர். ஆசிரியர்கள் பங்கேற்றனர்.செல்லூர் ஜெயபாரத் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியை சித்ராதேவி கொடியேற்றினார். மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.கல்லுாரிகள்மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லுாரி செயலர் சுவாமி வேதானந்த கொடியேற்றினார். என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. கல்லுாரி என்.சி.சி., கேப்டன் ராஜேந்திரன், முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் கார்த்திகேயன், அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு, உடற்கல்வி இயக்குனர் சீனிமுருகன் பங்கேற்றனர். மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் செயலாளர் ராதாகிருஷ்னன் கொடியேற்றினார். தினமலர் நாளிதழில் வெளியான மதுரை பெண் தியாகிகள் குறித்த செய்தியை பாராட்டினார். துணைத் தலைவர் மோகன் , உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, குமரேஷ், விஜய்கணேஷ், மணிகண்டன், முதல்வர் அனந்தன், துனண முதல்வர் சகாதேவன் பங்கேற்றனர்.மதுரை பாத்திமா மைக்கேல் கல்லூரியில் முதல்வர் நெல்சன் ராஜா கொடியேற்றினார். தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், காந்தி மியூசிய முதல்வர் தேவதாஸ் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். என்.எஸ்.எஸ்., அலுவலர் ஆதிமூலம், செவிலியர் தெரசா ஆரோக்கியமேரி பங்கேற்றனர்.மதுரை லேடி டோக் கல்லூரி இணைப்பேராசிரியர் கீதா கொடியேற்றினார். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவிகள் தேசியக்கொடியுடன் போதை பொருளுக்கு எதிரான பைக் ஊர்வலம் நடந்தினர். முதல்வர் கிறிஸ்டியானாசிங், ஒருங்கிணைப்பாளர்கள் அனிதா, சுஜாதா, சித்ரா, மௌனசுந்தரி, சுஜெமிமா ஜெயப்பிரியா, எஸ்தர்எலிசபெத் கிரேஸ் பங்கேற்றனர். மதுரை தல்லாக்குளம் சத்குரு வித்யாலய இசைக்கல்லுாரி, செயலர் வெங்கட்டநாராயணன் கொடியேற்றினார். முதல்வர் பாரதி பங்கேற்றார்.மதுரை அரசு மருத்துவ, செவிலியர் கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. டீன் ரத்தினவேல், செவிலியர் கல்லுாரி முதல்வர் ராஜாமணி, என்.சி.சி., அதிகாரிகள் சரவணன், செல்வராஜன் பங்கேற்றனர்.பசுமலை சி.எஸ்.ஐ., ஜெயராஜ், அன்னபாக்கியம் செவிலியர் கல்லுாரியில் முதல்வர் ஜோதி சோபியா, துணை முதல்வர் மெர்லின் ஜெயபால், டாக்டர் ஜான் சாம் அருண் பிரபு பங்கேற்றனர்.பரவை மங்கையர்க்கரசி கல்விக் குழும விழாவில் செயலாளர் அசோக்குமார் கொடியேற்றினார். டில்லி வேர்ல்ட் பப்ளிக் பள்ளி முதல்வர் சுனிதாதேவி வரவேற்றார். இயக்குநர் சக்திபிரனேஷ், பொறுப்பாளர் சரவண பிரதீப் குமார், கல்வி புலத் தலைவர் செந்துார் பிரியதர்ஷினி ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாற்றை எடுத்துரைத்தனர். கலை நிகழ்ச்சிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஆங்கிலத் துறை தலைவர் பிரதிபா நன்றி கூறினார்.திருநகர்மக்கள் மன்ற விழாவில் ஓய்வு பெற்ற மேஜர் ஜவஹர் கொடி ஏற்றினார். வணிகர்கள் நலச்சங்க தலைவர் சுரேஷ்பாபு, செயலாளர் சர்வேஸ்வரன் முன்னிலை வகித்தனர். ஜெயின்ட்ஸ் குரூப் குருசாமி, நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, பாக்கியம், விநாயகமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சுந்தர், கவுன்சிலர் இந்திராகாந்தி பங்கேற்றனர். மகாலட்சுமி காலனி சாரா நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சுஜாதா தலைமை வகித்தார். பொறியாளர் வின்சென்ட் முன்னிலை வைத்தார். அமர்நாத் கொடியேற்றினார். ஆதித்யா டிரஸ்ட் வெங்கடசாமி பேசினார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பொள்ளுமணி குழுவினர் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது.திருப்பரங்குன்றம் ஒன்றியம் விரகனூர் ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கண்மணி தலைமையில் ஊராட்சி தலைவர் சந்திரன் கொடியேற்றினார். ஆசிரியர்கள் பூர்ணவள்ளி, பிரமிளா, தேன்மொழி, அழகுமீனாள், விஜயலட்சுமி, வள்ளிநாயகி பங்கேற்றனர். மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவனியாபுரம் பஸ் ஸ்டாண்டில் நடந்த மக்கள் நீதி மைய விழாவில் நகர் செயலாளர் சிவக்குமார் தலைமை வைத்தார். நிர்வாகிகள் சுருளிராஜன், ஆசை, செந்தில், முனியாண்டி, பெருமாள், முக்கம்மாள் பங்கேற்றனர்.மேலுார்அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராவணன், மில்டன் பள்ளியில் தாளாளர் ரவிசந்திரன், ஆர்.வி, பள்ளியில் தாளாளர் விஜயலெட்சுமி, ஜாஸ் பள்ளியில் தாளாளர் ஷ்யாம், லதாமாதவன் கல்லூரியில் சேர்மன் மாதவன், கூலிபட்டியில் தலைமை ஆசிரியர் ரிஜ்வானா பேகம், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் பாண்டி தலைமையில் தேசிய கொடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தும்பைபட்டியில் தலைமையாசிரியை உமாதேவி தலைமையில் கொடியேற்றப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளிக்கு இலவசமாக டிவி வழங்கினர்.மேலுாரில் சுதந்திர போராட்ட, மொழிப்போர் தியாகிகள் ஆதிமிளகி, கட்டச்சாமி, தனுஷ்கோடி உள்ளிட்ட 35 பேரின் வீடுகளுக்கு தாசில்தார் இளமுருகன் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.கொட்டாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் குழு தலைவர் வளர்மதி கொடியேற்றினார். பி.டி.ஒ.,க்கள் செல்லப்பாண்டியன், ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருவாதவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சரவணன் கொடியேற்றினார். மாணவர்களுக்கு புத்தகங்கள், போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.உசிலம்பட்டிஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சங்கரலிங்கம் தேசியக் கொடி ஏற்றினார். தாசில்தார்கள் கருப்பையா, அன்பழகன் மற்றும் வருவாய் அலுவலர்கள் பங்கேற்றனர். கிளைச் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இனிப்பு வழங்கினர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் ரஞ்சனி கொடி ஏற்றினார். கமிஷனர்கள் கண்ணன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சகுந்தலா கொடி ஏற்றினார். கவுன்சிலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கிளை மேலாளர் சண்முககுமார் கொடி ஏற்றினார். செல்லம்பட்டி ஒன்றியத்தில் ஒன்றியக் குழு தலைவர் கவிதா தேசியக் கொடி ஏற்றினார். கமிஷனர்கள் ராஜா, கீதா, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் கல்லூரி செயலாளர் பாண்டியன் தலைமையில், தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வனராஜா முன்னிலையில் மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் டீன் நல்லகாமன் கொடி ஏற்றினார். முதல்வர் ரவி, நிர்வாக குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ., அய்யப்பன் கொடி ஏற்றினார். நாடார் சரஸ்வதி துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் மதன்பிரபு தேசியக்கொடி ஏற்றினார்.வாடிப்பட்டிசோழவந்தான் சட்டமன்ற அலுவலகத்தில் எம்.எல்.ஏ., வெங்கடேசன் தேசிய கொடி ஏற்றினார். தாசில்தார் நவநீதகிருஷ்ணன், ஆர்.ஐ., அசோக்குமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கென்னடி கண்ணன், பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், சத்யபிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் தனபாலன், நிர்வாகிகள் அயூப்கான், பாஸ்கரன், வினோத்வாடிப்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் சண்முகம் தலைமை வகித்தார். தலைவர் பால்பாண்டியன் கொடி ஏற்றினார். துணை தலைவர் கார்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி பங்கேற்றனர். பரவையில் பேரூராட்சி தலைவர் கலாமீனா கொடி ஏற்றினார். துணைத் தலைவர் ஆதவன், இளநிலை உதவியாளர் முத்துபாண்டி, மேற்பார்வையாளர்கள் ராமு, சுந்தராஜன் பங்கேற்றனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நவநீதகிருஷ்ணன் கொடி ஏற்றினார். தீயணைப்பு நிலையத்தில் அலுவலர் சதக்கத்துல்லா கொடி ஏற்றினார். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, எஸ்.ஐ.,க்கள் முருகேசன், உதயகுமார், சேர்வை மற்றும் போலீசார் பங்கேற்றனர்.குட்லாடம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை மகாலட்சுமி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவி ஜோதி மீனா கொடியேற்றினார். துணைத் தலைவர் கதிரவன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் லட்சுமி முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அங்கப்பன் கொட்டம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. பாண்டியராஜபுரம் அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லக்குமணன் கொடி ஏற்றினார். விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ., ஐயப்பன் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் சிவராமபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி, எட்டூர் கமிட்டி தலைவர் ஜெயபால், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜா, உதவி தலைமை ஆசிரியர் பிரபாகர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.நடுமுதலைக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சின்னச்சாமி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பூங்கொடி பாண்டி கொடி ஏற்றினார். ஒன்றிய கவுன்சிலர் அரவிந்த் பேசினார். ஓரங்க நாடகம், வீரமங்கை வேலு நாச்சியார் வரலாறு பேசுதல், சிலம்பம், யோகா உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவி அன்னபாண்டியம்மாள் பரிசு வழங்கினார். பானா மூப்பன்பட்டியில் ஊராட்சி தலைவர் மகாராஜன் கொடி ஏற்றினார்.அலங்காநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிராக்ரன்ஸ் லதா கொடி ஏற்றினார். உதவி தலைமை ஆசிரியர் ஜோசப் ராஜ் முன்னிலை வகித்தார். என்.சி.சி., பிரமிட் அமைத்து அசத்தினர். என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. பள்ளி மேலாண்மைக்குழு ரகுபதி, கோவிந்தராஜன், தீபசுகந்தி, முன்னாள் ஆசிரியர் ரவிசந்திரன் பங்கேற்றனர். ஆசிரியர் சக்திகுமார் தொகுத்து வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் காட்வின் நன்றி கூறினார்.தேனுாரில் சுழியம் இளைஞர் நற்பணி மன்ற விழாவில் புரவலர் சாமிக்காளை தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் மாயாண்டி முன்னிலையில் விவசாயி செல்லம் கொடி ஏற்றினார். மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மன்ற நிர்வாகிகள் கார்த்திகை குமரன், ஜெயகுமார், காந்தி சதீஸ், நேரு யுவகேந்திரா தேசிய தொண்டர் பாண்டீஸ்வரி பங்கேற்றனர்.நாச்சிகுளத்தில் நடந்த விழாவில் ஜமாஅத் செயலாளர் காதர் மைதீன் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் ஹக்கீம், ஊராட்சி தலைவர் சுகுமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.சோழவந்தான்பேரூராட்சியில் துணைத் தலைவர் லதா கொடி ஏற்றினார். இளநிலை உதவியாளர்கள் கல்யாணி, கண்ணம்மாள், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சிவபாலன் கொடி ஏற்றினார். எஸ்.ஐ.,க்கள் பழனிச்சாமி, முத்துபாண்டி, போலீசார் உக்கிரபாண்டி, முத்து, கனகராஜ், சந்திசேகரன், பூமா பங்கேற்றனர். தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் அலுவலர் பசும்பொன் கொடியேற்றினார். காடுபட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., இளங்கோவன் கொடி ஏற்றினார். போலீசார் பார்த்திபன், முகமது ஜின்னா, விஜயா பங்கேற்றனர். சமயநல்லுரர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஆனந்தி கொடி ஏற்றினார். எஸ்.ஐ., ராஜ்குமார், போலீசார் சுரேஷ்குமார், பாண்டியராஜன் பங்கேற்றனர்.அலங்காநல்லுார்பேரூராட்சியில் தலைவி ரேணுகா ஈஸ்வரி கொடி ஏற்றினார். துணைத் தலைவர் சாமிநாதன், செயல் அலுவலர் ஜூலான் பானு இளநிலைய உதவியாளர்கள் ராஜா, அபிதா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மரக்கன்றுகள் நடப்பட்டது. பாலமேடு பேரூராட்சியில் தலைவி சுமதி கொடி ஏற்றினார். துணைத் தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் தேவி, இளநிலை உதவியாளர் கிரன்குமார் மற்றும் துரய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.பேரையூர்நீதிமன்றத்தில் நடுவர் வேலுச்சாமி தேசிய கொடி ஏற்றினார். வழக்கறிஞர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சாந்தி கொடி ஏற்றினார். போலீஸ் கோட்ட அலுவலகத்தில் டி.எஸ்.பி., இலக்கியா கொடியேற்றினார். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் காந்தி கொடியேற்றினார். பேரூராட்சியில் சேர்மன் கே. கே. குருசாமி கொடியேற்றினார். துணை சேர்மன் பாஸ்கர், செயல் அலுவலர் ஜெயதாரா, கவுன்சிலர்கள் பங்கேற்றனர். எஸ். கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெகதீசன் கொடியேற்றினார். கே. கே. ஜி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் காமாட்சி கொடியேற்றினார். அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மகேஷ் குமார் கொடியேற்றினார். எஸ். கீழப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தேசிய கொடி ஏற்றினார்.டி.கல்லுப்பட்டிலார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டி.எஸ்.பி. இலக்கியா கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் சந்திரா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். பேரூராட்சியில் சேர்மன் முத்துகணேஷ் கொடியேற்றினார். துணைத் தலைவர் பாண்டிமுருகன், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் முதல்வர் செல்வி கொடியேற்றினார். ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சண்முகப்பிரியா கொடியேற்றினார். தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் சீனிவாசன் கொடியேற்றினார். எம்.எஸ்.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் சீனிவாசன் கொடியேற்றினார்.எழுமலைபேரூராட்சியில் தலைவர் ஜெயராமன் தேசியக் கொடி ஏற்றினார். செயல் அலுவலர் சங்கர் கணேஷ், துணை தலைவர் நாகஜோதி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பாரதியார் பள்ளியில் தாளாளர் பொன்கருணாநிதி கொடி ஏற்றினார். முதல்வர் ஆறுமுகசுந்தரி, ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். 75 தேசத் தியாகிகளின் வேடமணிந்த மாணவர்களும் விழாவில் கலந்து கொண்டனர். சின்னக்கட்டளை பாரதியார் பள்ளியில் முதல்வர் நாகலட்சுமி முன்னிலையில் நிர்வாகி திருமலைராஜன் தேசியக் கொடி ஏற்றினார். தர்மவித்யாபவன் பள்ளியில் முதல்வர் மேகலா முன்னிலையில் நிர்வாகி பிரேமலதா கொடி ஏற்றினார். அரிஜன் துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் வளர்மதி முன்னிலையில் நிர்வாகி வரதராஜன் தேசியக் கொடி ஏற்றினார்.மள்ளப்புரம் திருவள்ளுவர் கல்வி நிறுவனங்கள் கல்வியியல் கல்லூரியில் முதல்வர் கருப்பசாமி, நிர்வாகி சென்னகிருஷ்ணன் முன்னிலையில் நிர்வாகி ராமராஜ் கொடி ஏற்றினார். மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் செல்வக்குமாரி, நிர்வாக அலுவலர் சந்திரன் முன்னிலையில் நிர்வாகி பெருமாள் கொடி ஏற்றினார். பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் சுபாராஜன், நிர்வாகி செல்வராஜ் முன்னிலை வகித்தனர். நிர்வாகி லோகநாதன் கொடி ஏற்றினார். மெட்ரிக் பள்ளியில் முதல்வர் தனபாக்கியம், நிர்வாகி ராமகிருஷ்ணன் முன்னிலையில் நிர்வாகி சுப்பிரமணி தேசியக்கொடி ஏற்றினார். எழுமலை விச்வ வித்யாலயா பள்ளியில் தாளாளர் பாண்டியன், முதல்வர் அருண்குமார் முன்னிலையில் முன்னாள் ராணுவ வீரர் சுபேதார் முத்துச்சாமி தேசியக் கொடி ஏற்றினார் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.எழுமலை சீல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இந்திரா காந்தி கொடி ஏற்றினார். புரவலர் சுப்புராஜ் குடும்பத்தினர் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர். வடக்கம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சாம்ராஜ் கொடி ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜெயபால், கல்வி மேலாண்மைக் குழு தலைவர் மலர்வள்ளி, புரவலர் சின்னன் பங்கேற்று எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் -2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X