கனல் கண்ணன் கைதுக்கு கண்டனம்: ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
Added : ஆக 17, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district Newsதிருப்பூர் : கனல் கண்ணன் கைது கண்டித்து, திருப்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து முன்னணியினர் 300 பேரை, போலீசார் கைது செய்தனர்.'ஸ்டன்ட் மாஸ்டர்' கனல் கண்ணன், போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில், நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில செயலாளர் கிஷோர்குமார் மற்றும் அமைப்பை சேர்ந்த 300 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி தரவில்லை. இதனால், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, ஹிந்து முன்னணி மாநில தலைவர் உட்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்து, தெற்கு ரோட்டரி மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

'மைக்' பறித்த போலீசார்
ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இதுகுறித்து ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஒரு ஆட்டோவில் மைக் செட் மற்றும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருந்தது. மைக்கில் ஆர்ப்பாட்ட கோஷம் எழுப்பிய நிர்வாகியை தடுத்து, போலீசார் மைக் பறித்து இணைப்பை துண்டித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் ஆவேசமடைந்த நிர்வாகிகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.'எமர்ஜென்ஸியை விட மோசம்'


ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், எமர்ஜென்ஸி காலத்தில் கூட இதுபோல் மோசமான ஆட்சி நடந்ததில்லை. குறிப்பாக ஹிந்துக்கள், ஹிந்து அமைப்பினர், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஊடகவியலாளர் மீது, பொய் வழக்குப்பதிவு செய்கின்றனர்.போலீசில் கூட சில அதிகாரிகள், மதம் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். நடராஜர் சிலையை அவமதித்தோர், தனிநாடு கோஷம் எழுப்பியோர், ஹிந்துக்களை முழுமையாக அழிக்க ஒரு மணி நேரம் போதும் என்றெல்லாம் பேசிய பலரும் சுதந்திரமாக உள்ளனர். அவர்களை இந்த அரசு கண்டு கொள்ளாமல், தட்டி கொடுத்து வளர்த்து விடுகிறது. கனல் கண்ணன் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவரது கருத்துக்கு ஹிந்து முன்னணி ஆதரவு தெரிவிக்கிறது. அவரை ஏதோ ஒரு பயங்கரவாதி போல தேடிப்பிடித்து கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு, அவர் கூறினார்.
 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஆக-202210:14:09 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X