வங்கி கொள்ளை வழக்கு : கோவை நகைப்பட்டறை உரிமையாளர் கைது
Added : ஆக 17, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கோவை : சென்னையில், வங்கி கொள்ளை வழக்கில், கோவையை சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.



சென்னை, அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, 'பெட் பாங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு, வாடிக்கையாளர்கள் அடகு வைத்த, 32 கிலோ நகைகள், கடந்த 13ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், அதே வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரியும் முருகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க, 11 தனிப்படை அமைக்கப்பட்டு, சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்த சந்தோஷ், 30, மண்ணடி தெருவை சேர்ந்த பாலாஜி, 28 மற்றும் முக்கிய குற்றவாளியான முருகன், செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதற்கிடையே இந்த சம்பவத்தில் சூர்யா, 31, மற்றும் கோவை, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஸ்ரீவத்சவ் உட்பட சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை தனிப்படை போலீசார் தேட துவங்கினர். சூர்யா மற்றும் ஸ்ரீவத்சவ், ஆர்.எஸ்.புரத்தில் பதுங்கி இருந்து, 13.7 கிலோ நகையை கோவை கொண்டு வந்து உருக்க முயற்சி செய்வதாக, சென்னை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கோவை வந்தனர்.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்து சூர்யா, கோவையில் இருந்து தப்ப முயன்றார். தனிப்படை போலீசார், கோவை போலீசாரின் உதவியுடன், ஆர்.எஸ்.புரத்தில் பதுங்கி இருந்த வேடப்பட்டியை சேர்ந்த தங்க நகை பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சவை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், வங்கியில் கொள்ளையடித்த நகைகளை உருக்க முயன்றது உறுதியானது. இவரை கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X