செய்திகள் சில வரிகளில் ஈரோடு
Added : ஆக 17, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

7 பேருக்கு பி.எஸ்.ஓ., பாதுகாப்பு
ஈரோடு: விநாயகர் சதுர்த்தி விழா காலத்தில், ஹிந்து முன்னணி பிரமுகர்கள் மீது, சமூக
விரோதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்று
உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அச்சுறுத்தல் உள்ளதாக கருதப்படும், ஹிந்து முன்னணி பிரமுகர்கள் ஏழு பேருக்கு, பி.எஸ்.ஓ., (துப்பாக்கி தனி போலீஸ் பாதுகாப்பு) பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீஸ், மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ், மேற்கு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி, சேலம் கோட்ட செயலாளர் பழனிச்சாமிக்கு பாதுகாப்பு தரபபட்டுள்ளது.
கொடிவேரியில் இன்று முதல்
பொதுமக்களுக்கு அனுமதி
கோபி: பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கடந்த, 5ம் தேதி முதல், கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பவானி ஆற்றில் இருந்து, 500 கன அடி உபரி நீரே, நேற்று திறக்கப்பட்டது. இதனால் தடுப்பணையில், இன்று முதல், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
குறையும் கொரோனா பாதிப்பு
ஈரோடு: மாவட்டத்தில் நேற்று, 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேசமயம், கொரோனாவில் சிகிச்சை பெற்று வந்த, 46 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது, 332 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்கள் நிம்மதி அடைகின்றனர்.
கடம்பூரில் கனமழை
சத்தியமங்கலம்: கடம்பூர் மலைதியில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை, 6:30 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரம் அதே வேகத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் குன்றி மலைப்பகுதியில் அரை மணி நேரம் மழை பெய்தது.
எலத்துார் டவுன் பஞ்.,
அலுவலகம் முன் தர்ணா
நம்பியூர்: எலத்துாரில், மாகாளியம்மன் கோவில் அருகே, காலியிடத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, 30க்கும் மேற்பட்டோர் எலத்துார் டவுன் பஞ்., அலுவலகம் முன் நேற்று மதியம் குவிந்தனர். காலியிடத்தை மீட்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் துறையினர் மற்றும் கடத்துார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளிக்கவே, அனைவரும் கலைந்து சென்றனர்.
தாளவாடி தொழிலாளி
தாராபுரத்தில் பலி
தாராபுரம்: ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்த லோகேஷ் மகன் மணிகண்டன், 24, பட்டறை தொழிலாளி. பழநி அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, நண்பர்களுடன் சென்றார். நேற்று முன்தினம் மாலை ஊர் திரும்பினர். தாராபுரம் அமராவதி ஆற்றில், புதிய பாலம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்றார். எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி பலியானார். தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், உடலை மீட்டனர். ஆற்றின் இந்தப் பகுதியில், அபாய பகுதி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதை உதாசீனப்படுத்தி குளிக்க செல்வோர் பலியாவது தொடர்கதையாவதாக, போலீார் தெரிவித்தனர்.
தேசியக்கொடி அவமதிப்பு
பள்ளி ஆசிரியர் கைது
தாராபுரம், ஆக. 17-
தேசியக்கொடியை அவமதித்ததாக, பள்ளி ஆசிரியரை, தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம், குறிஞ்சி நகரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் எட்வின், 34; சுதந்திர தினத்தன்று வீட்டு முன் தேசியக்கொடி ஏற்றினார். அதில், 'இயேசுவே, இந்தியாவை ஆசீர்வதியும்' என்று எழுதினார்.
இதையறிந்து பா.ஜ.,வினர், அவர் வீட்டையும், விசாரணைக்கு அவரை அழைத்து சென்றபோது, தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்டனர்.
பா.ஜ.,வினர் புகாரின்படி, ஆசிரியர் எட்வினை தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.
இந்து முன்னணியினர்
கண்டன ஆர்ப்பாட்டம்
காங்கேயம்: காங்கேயத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணியினரை, போலீசார் கைது செய்தனர்.
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணனை, போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து, திருப்பூர் தெற்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், காங்கேயத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். போலீசாரின் அனுமதியின்றி நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் கந்தசாமி, பொது செயலாளர் சதீஷ்குமார், செயலாளர் சங்கிலித்துரை உள்ளிட்ட, 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் முத்துார், ஈஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ், 55; பயணியர் ஆட்டோ இயக்கி வந்தார். மனைவி சத்யா, 35, மகன் தீபக், 10 மற்றும் உறவினர்கள் நான்கு பேருடன் திருப்பூரில் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றார்.
தரிசனம் முடிந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். காங்கேயம்-முத்துார் சாலையில் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் முருகேஷ் இறந்தார். அவர் மனைவி, உறவுக்கார பெண் பலத்த காயமடைந்தனர். ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மாஜி படைவீரர்கள்
2 பேர் மீது வழக்கு

ஈரோடு: போராட்டம் அறிவித்த நிலையில், நிர்வாகிகளை விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து, ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர்கள், சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருந்தனர். இது தொடர்பாக, முன்னாள் ராணுவத்தினரான பழனியப்பன், தீபா ஆகியோர் மீது, சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சாகர் பள்ளியில்
சுதந்திர தினவிழா
பெருந்துறை, ஆக. 17-
பெருந்துறை சாகர் இண்டர்
நேஷனல் பள்ளியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சாகர் அறக்கட்டளை தலைவர் ராமசாமி, தேசியக்கொடி ஏற்றினார்.
தமிழாசிரியர் சிவக்குமார் வரவேற்றார். பள்ளி தாளாளர் சவுந்திரராசன், சுதந்திர தின சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது; இனிப்பு வழங்கப்பட்டது.
விழவில் அறக்கட்டளை துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் பழனிச்சாமி, இணைச்செயலர் சாமிநாதன், அறக்கட்டளை உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் ஷீஜா, ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.----
'பார்' ஊழியரை தாக்கிய 5 பேருக்கு வலை
ஈரோடு, ஆக. 17-
ஈரோட்டில், டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கிய ஐந்து பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், வன்னியர் வீதியை சேர்ந்தவர் ரபீக் ராஜா, 50; டாஸ்மாக் பார் ஊழியர். பாரில் குடிமகன் ஒருவரின் மொபைல்போன் காணாமல் போனது. 'சிசிடிவி' கேமரா பதிவை ரபீக் ராஜா ஆராய்ந்ததில், அடிக்கடி வந்து செல்லும் ஈரோடு, ஈ.வி.என்.,சாலை பகுதி பிரகாஷ், போனை எடுத்தது தெரிந்தது. அவரிடம் மொபைல்போனை பெற்று உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் நான்கு பேருடன் சேர்ந்து, ரபீக் ராஜாவை மரக்கட்டையால் தாக்கினார். காயமடைந்த அவர் புகாரின்படி, சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.
கீழ்பவானியில் தண்ணீர் திறப்பு
678 டன் விதை நெல் இருப்பு
ஈரோடு, ஆக. 17-
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஈரோடு மாவட்டத்தில், 678 டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னதம்பி, செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஈரோடு மாவட்டத்தில், 60 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. இதில் சம்பா பட்டத்துக்கு தேவையான ஏ.டீ.டி.38 ரகம் நெல், 104 டன்; ஏ.டீ.டி.39 ரகம் - 16 டன்; ஐ.ஆர்.20 -123 டன்; பி.பி.டி.5204 - 66 டன்; சம்பா சப்:1-70 டன்; பாரம்பரிய ரகம் துாயமல்லி - 3 டன் உட்பட, 13 வகை ரகங்கள், 458 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தவிர அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில், 220 டன் விதை நெல் இருப்பில் உள்ளது. விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம், விதை மூலம் பரவும் நோய் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஆக. 17-
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில்,
ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில ஊடக பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜோதி குமாரவேல் தலைமை வகித்தார்.
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி காணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு அமல்படுத்தினால், தமிழர் அல்லாத ஜாதியினர் பாதிக்கப்படுவர் என்ற அச்சத்தால், கமிஷன் அறிக்கையை வெளியிடாமல் உள்ளனர். தமிழகத்தில் இரண்டு கோடி வன்னியர்கள் உள்ளனர். எனவே, 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். மாவட்ட செயலாளர்
பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
பயன்பாட்டுக்கு வந்த
சோலார் விளக்குகள்
பெருந்துறை, ஆக. 17-
பெருந்துறை ஒன்றியம், சுள்ளிப்பாளையம் ஊராட்சியில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், சாலையோரம், வீதிகள் என ஏழு சோலார் மின் விளக்கு அமைக்கப்பட்டது. இவற்றை பயன்பாட்டுக்கு எம்.எல்.ஏ., ஜெயகுமார் நேற்று தொடங்கி வைத்தார். இதில் பெருந்துறை ஒன்றிய செயலாளர் அருள் ஜோதி செல்வராஜ்,
ஒன்றிய மாணவரணி தலைவர் பால் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
570 மதுபாட்டில்கள்
2 மொபட் பறிமுதல்
ஈரோடு, ஆக. 17-
மாவட்டத்தில் சுதந்திர தின நாளில், மது விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்த போலீசார், ௫௭௦ மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் சந்துக்கடைகளில், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகிறதா? என, மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு போலீசார், கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில், 33 வழக்குகள் பதிவு செய்து, 570 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். குறிப்பாக கவுந்தப்பாடி பகுதியில் மொபட்டில், 123 மதுபாட்டில்களுடன் சென்ற, கவுந்தப்பாடியை சேர்ந்த வேலு, 36; கோபியை சேர்ந்த கவுதம், 24; திங்களூரை சேர்ந்த கார்த்தி, 26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மதுபாட்டில், மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
கோபி பகுதியில், 108 மதுபாட்டில்களுடன், மொபட்டில் சென்ற திருப்பூரை சேர்ந்த கந்தசாமி, 46, சிக்கினார். மதுபாட்டில், மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
மொபட் மீது மோதிய கார்
கூலி தொழிலாளி சாவு
ஈரோடு, ஆக. 17-
ஈரோட்டில் நள்ளிரவில் மொபட் மீது கார் மோதியதில், தொழிலாளி இறந்தார்.
ஈரோடு, பழையபாளையம், கீதா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 39, கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். கடந்த, 14ம் தேதி இரவு ஈரோடு-நசியனுார் ரோட்டில், வீரப்பம்
பாளையம் பிரிவு அருகே, ஹோண்டா
ஆக்டிவா மொபட்டில் சென்றார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த ஹூண்டாய் வெர்னா கார் மோதியது.
இதில் கார்த்திகேயன் பலத்த காய
மடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். காரை ஓட்டி சென்ற, ஈரோடு, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ராஜேஸ், 28, மீது வீரப்பன்சத்திரம் போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெருந்துறை அருகே விபத்து
எழுமாத்துார் முதியவர் பலி
பெருந்துறை, ஆக. 17-
பெருந்துறை அருகே, கார் மோதியதில், எழுமாத்துாரை சேர்ந்தவர் பலியானார்.
கொடுமுடி, பொன்காளி வலசை சேர்ந்த விவசாயி ராமலிங்கம், 40; இவரது உறவினர் எழுமாத்துார், செல்லாத்தாபாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன், 60; இருவரும் ஹீரோ ேஹாண்டா ஸ்பிளண்டர் பைக்கில், பெருந்துறைக்கு நேற்று வந்தனர். பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில், பெத்தாம்
பாளையம் பிரிவு அருகே சென்றபோது, ஹுண்டாய் சான்ட்ரோ கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்து
வமனையில் சேர்த்தனர். அங்கு
சந்திரசேகரன் இறந்தார். ராமலிங்கம் சிகிச்சை பெற்று வருகிறார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X