பட்டு வளர்ச்சி துறை தகவல்உழவன் செயலியில் 'மாயம்' | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பட்டு வளர்ச்சி துறை தகவல்உழவன் செயலியில் 'மாயம்'
Added : ஆக 18, 2022 | |
Advertisement
 



பொங்கலூர் : விவசாயிகளுக்கு உழவன் செயலி சிறந்த வழிகாட்டியாக உள்ளது.இதில், மானிய திட்டங்கள், பயிர் காப்பீடு, இடுபொருள் முன் பதிவு, உரம், விதை இருப்பு, சந்தை நிலவரம், வானிலை, அணை நீர்மட்டம், வேளாண் செய்திகள், உழவன் ஈ சந்தை, பட்டு வளர்ச்சி துறை உள்ளிட்ட,21 பகுதிகள் உள்ளன. மானியத் திட்டங்களுக்கு விண்ணப்பித்தாலும் விவசாயிகள் உழவன் செயலி வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பட்டு வளர்ச்சி துறை குறித்த எந்த தகவலும் செயலியில் கிடைப்பதில்லை. மானிய திட்டங்கள், சந்தை விலை நிலவரம், தொடர்பு அலுவலர் விபரம் போன்றவற்றை பட்டு விவசாயிகள் எளிதாக தெரிந்து கொண்டனர்.இந்த ஒரு வாரமாக உழவன் செயலி செயல்படாததால் விவசாயிகள் சந்தை நிலவரங்களை கூட தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, உழவன் செயலியில் பட்டு வளர்ச்சித் துறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X