கருப்புக்கொடி போராட்டம்தொடரும் பொதுமக்கள் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கருப்புக்கொடி போராட்டம்தொடரும் பொதுமக்கள்
Added : ஆக 18, 2022 | |
Advertisement
 



பல்லடம், : பல்லடம் நகராட்சி, 8வது வார்டு பச்சாபாளையம் பகுதியில், மின் மயானம் அமைக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பாக, சமீபத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்ற பொதுமக்கள் கூட்டத்திலிருந்து ெவளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, கடந்த பத்து நாட்களுக்கு மேலாக, மின் மயானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடு தோறும் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதற்காக, கருப்பு கொடிகளை அகற்றிவிட்டு, தேசிய கொடியை பறக்க விட்டனர். தொடர்ந்து மூன்று நாட்கள் தேசியக்கொடி ஏற்றப்பட்ட நிலையில், நேற்று முதல் மீண்டும் வீடு தோறும் கருப்பு கொடியை ஏற்றி வைத்து, தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X