மருத்துவ ஜவுளி பொருளில் கிருமி இருக்கா: கண்டுபிடிக்க கோவையில் அமைகிறது 'ஆன்டி வைரல் டெஸ்டிங் சென்டர்'
Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: கோவையிலுள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக்கழகத்தில் (சிட்ரா), ஆன்டி வைரல் டெஸ்டிங் சென்டர் (எதிர் உயிரி வைரஸ் பரிசோதனை மையம் ) மற்றும், 25 கோடி ரூபாய் செலவில், மருத்துவ உபகரணங்கள் பரிசோதனை மையம் ஆகியவை அமைகிறது.



latest tamil news



மருத்துவத்துறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும், பொருட்களில் பெரும்பாலானவை ஜவுளியோடு இணைந்துள்ளன. அந்த வகையில், 54 மருத்துவ ஜவுளிப்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன.

மருத்துவ ஜவுளிப்பொருட்கள் சுத்தமாக, எவ்வித நுண் உயிரிகளும் தாக்காத வகையில் இருப்பது அவசியம். இப்பொருட்கள் மருத்துவத்துறையில் பயன்படுத்துவதற்கு தகுதியானவைதானா என்பதை பரிசோதித்து, தரச்சான்று அளித்தால் மட்டுமே, அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.இப்பொருட்களை பரிசோதனை செய்து, சான்றளிப்பதற்காக புனேயில் உள்ள 'தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள ராஜீவ் காந்தி உயிர் தொழில்நுட்பவியல் மையம் ஆகிய இரண்டு மட்டுமே, நம் நாட்டில் உள்ளது.

இந்த வரிசையில், கோவையிலுள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக்கழக வளாகத்தில்(சிட்ரா) ஆன்டி வைரல் டெஸ்டிங் சென்டர் அமைப்பதற்கு, மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்திடம், ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. விரைவில் பரிசோதனை மையம் கோவையில் அமையும் என்கிறார், சிட்ரா முதன்மை விஞ்ஞானி சிவக்குமார்.






அவர் மேலும் கூறுகையில், ''இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS) மற்றும் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக்கழகம் சார்பில், ஆன்டி வைரல் டெஸ்டிங் சென்டர் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தில், மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் பி.பி.இ.,கிட் முதல் அனைத்து வகையான மருத்துவ ஜவுளிப்பொருட்களும், பரிசோதனை செய்யப்பட்டு தரச்சான்று அளிக்கப்படும். அதன்பின்பே, அவை விற்பனைக்கும் பயன்பாட்டிற்கும் அனுமதிக்கப்படும்,'' என்றார்.



மத்திய அரசுக்கு நன்றி!



மருத்துவ ஜவுளி தயாரிப்பாளர்கள் கூறுகையில், 'இந்த மையம் கோவையில் அமைவது, இந்நகரின் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு அளித்துள்ள மிகப்பெரிய ஊக்குவிப்பு. இம்மையத்தால், கோவை மட்டுமல்லாமல் சுற்றுப்புற மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள் அனைத்தும் பயனடையும். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த, மத்திய அரசுக்கு நன்றி' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ny Name - Appalachian,யூ.எஸ்.ஏ
18-ஆக-202213:58:27 IST Report Abuse
Ny Name ;;;;;
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
18-ஆக-202210:14:35 IST Report Abuse
sankar நம்ம ஊர் அரசியல் கிருமிகளுக்கும் அதே மாதிரி anti -virus test centre வைக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X