தென்னிந்திய பள்ளி கிரிக்கெட் சங்கம்: அமைச்சர் மெய்யநாதன் துவக்கம் | சென்னை செய்திகள் | Dinamalar
தென்னிந்திய பள்ளி கிரிக்கெட் சங்கம்: அமைச்சர் மெய்யநாதன் துவக்கம்
Added : ஆக 18, 2022 | |
Advertisement
 
Latest district News



சென்னை : பள்ளி மாணவர்களின் கிரிக்கெட் கனவுகளை நிறைவேற்றும் வகையில், தென்னிந்திய பள்ளி கிரிக்கெட் சங்கத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.



சென்னை கிண்டியில் நடந்த இந்தியன் விருதுகள் வழங்கும் விழாவில், இந்த அமைப்பிற்கான நிர்வாகிகளையும் அறிவித்தார். இதன்படி, அதன் தலைவராக ஜான் அமலன், பொதுச் செயலராக பிரதீப்குமார், செயலராக ஜோஸ்வா எடிசன், பொருளாளராக குடந்தை அஷ்ரப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக பள்ளி கிரிக்கெட் கூட்டமைப்பின் கவுரவ தலைவராக அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம், தலைவராக விக்னேஷ் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

பின், அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:
விளையாட்டு மைதானம் உள்ள ஊரில் ஜாதிப் பாகுபாடு இருக்காது. விளையாடும் இளைஞர்கள் தவறான வழியில் செல்ல மாட்டார்கள். விளையாட்டு பல சிக்கல்களுக்கு தீர்வாக இருக்கும்.அதன்படி, நாட்டில் அதிக இளைஞர்களால் விரும்பப்படும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. இதில், பல இளைஞர்கள் மிகத் திறமையானவர்களாக உள்ளனர்.
அவர்கள் அந்த துறையில் அடுத்தடுத்து செல்வதற்கான வழிமுறைகள் தெரியாமல் தேங்கி விடுகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான பயிற்சியளித்து மாநில போட்டிகளில் பங்கேற்கவும், தேசிய வீரராக மாற்றவும் தான் இந்த அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இதற்கு, விளையாட்டுத் துறையின் முழு ஒத்துழைப்பும் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X